முதல்வர்களைச் சந்திப்பது தவறா..?: மோடி சந்திப்பு குறித்து சரத்பவார் பல்டி பதில்
மும்பை: ஒரு இந்திய முதல்வரைச் சந்திப்பதில் தவறென்ன இருக்கிறது, நான் என்ன பாகிஸ்தான் அல்லது சீனாக்காரரையா சந்தித்தேன் என மோடி சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
அது தொடர்பாக, சரத்பவார் மோடியைச் சந்திப்பது போல புகைப்படமும் வெளியானது. ஆனால், அத்தகவலை தொடர்ந்து மறுத்து வந்தார் சரத்பவார். ஆனால், தற்போது மோடியைச் சந்தித்தது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ள சரத்பவார், ஒரு முதல்வரைச் சந்திப்பது தவறா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது :-
மத்திய விவாசாயத்துறை அமைச்சரான எனக்கு, நாட்டில் உணவு பொருள் உற்பத்தியை அதிகரிக்க செய்வது கடமை. இதற்காக நான் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்.
மேற்குவங்காளம சென்ற நான் அங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினேன்.அதேபோல், நவீன் பட்நாயக், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். அப்போது அகமதாபாத் செல்லும் போது நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன்.
இப்படி இருக்கையில் திடீரென ஒருநாள், செய்தி தாள்கள் நான் மோடியை சந்தித்தாக செய்திகள் வெளியிடுகின்றன. முதல்வர்களைச் சந்தித்து பேசுவது எப்படி தவறாக அமையும்? நான் பாகிஸ்தான் அல்லது சீனாவை சேர்ந்த யாரையாவது சந்தித்தேனே? அவர் ஒரு மக்கள் பிரநிதி, அவரை சந்திப்பது எனது வேலையின் ஒரு பகுதி' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
