ஜெயலலிதாவுக்கு வெளி உணவு அனுமதி.. ஆனந்த பவன் உணவை சாப்பிடுகிறார்!
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சனிக்கிழமை இரவு ஓ. பன்னீர் செல்வம் வாங்கிக் கொடுத்த அடையாறு ஆனந்த பவன் சாப்பாட்டை சாப்பிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக தீர்ப்பை அறிவித்தவுடன் தனக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் விவிஐபி செல்லில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டார்.
நேற்றிரவு சிறைக் கைதிகளுக்கு உணவாக கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவை தான் வழங்கப்பட்டன.
ஆனால் ஜெயலலிதா சிறை உணவை சாப்பிடவில்லை. மாறாக ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்து கொடுத்த அடையாறு ஆனந்த பவன் இட்லியை சாப்பிட்டுள்ளார். ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் வெளி உணவை அனுமதித்துள்ளனர். அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதிக்கப்படும் என்றே தெரிகிறது.
இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதாவுக்கு சிறையில் 24 மணிநேரமும் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட 3 இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ஜெயலலிதா சாப்பிட்டார். 8 மணிக்கு ஒரு கிளாஸ் பால் குடித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications