அடேங்கப்பா! இப்படியெல்லாம் ஆம்லெட் இருக்கா?.. இந்த மாஸ்டருக்கு முதல்ல அவார்டை கொடுங்கப்பா!
சென்னை: அடேங்கப்பா! இப்படியெல்லாம் ஆம்லெட் இருக்கா?.. என்று சொல்கிற வகையில், கொக்கக் கோலா மற்றும் ஓரியோ பிஸ்கட்டில் ஆம்லேட் தயார் செய்து திகைக்க வைத்துள்ளார் ஓட்டல் மாஸ்டர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
'ஆம்லெட்' இதை சுவைத்து பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். உலக முழுவதும் பல வீடுகளில் ஆம்லெட் இன்றியமையாத உணவு பண்டங்களில் ஒன்றாகவே உள்ளது.
அதிலும் இறைச்சிகளை விட முட்டை விலை மிக குறைவாக இருப்பதாலும், எளிதாக மிக குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம் என்பதாலும் அனைவரின் விருப்பத் தேர்வாக ஆம்லேட் இருந்து வருகிறது.

ஆம்லேட் பலவிதம்
அதிலும் இந்தியாவில் சாலையோரக் கடைகள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை ஆம்லேட் இல்லாமல் இருக்காது. ஆம்லேட்டில் பல வகைகளாக வெவ்வேறு பகுதிகளில் காணக்கிடைக்கிறது.
அதன் ருசிக்காக பல வகைகளில் ஆம்லேட் போடப்படுவதையும் அதை ருசித்தும் நாம் பார்த்து இருக்கிறோம். மக்களின் உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் அடிப்படையில் ஆம்லேட் வெவ்வேறு விதமாக செய்யப்படும். எனினும், அடிப்படையாக முட்டை, உப்பு, எண்ணெய், மிளகு தூள், காய்கறிகள், ( விருப்பப்பட்டால்), இறைச்சி (விருப்பபட்டால்) ஆகியவற்றோடும் சேர்த்து ஆம்லேட் செய்வது வழக்கம். பிரெட் ஆம்லேட் கூட நமது ஊரில் மிகவும் பிரபலம்.

என்ன மாதிரியான டேஸ்ட் இருக்கும்?
ஆனால், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், ஆம்லேட்டில் தயாரிக்கப்படும் புது வகை உணவு பதார்த்தம் ஒன்று நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவானது பார்க்கும் சிலரை முகம் சுளிக்கவும், இது என்ன மாதிரியான டேஸ்ட் இருக்கும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

அப்படி என்ன தான் இருக்குது
அந்த வீடியோவில், சூடான ஒரு பாத்திரத்தில் கொக்கக் கோலாவை ஊற்றும் சமையல் மாஸ்டர், அப்படியே ஒரு ஓரியோ பிஸ்கட்டையும் தூள் தூளாக்கி அதன் மீது போட்டு விட்டு கிளறிவிடுகிறார். அதன்பிறகு, ஒரு டம்ளரில் உடைத்து ஊற்றி வைத்திருந்த முட்டையை, அதனுள் ஊற்றுகிறார்.
அதன் பிறகு சில விநாடிகள் வேக வைக்கிறார். ஏறத்தாழ ஆம்லேட் போன்ற தோற்றத்திற்கு இது வந்து விடுகிறது. தொடர்ந்து அதில் பிரெட்டை சிறிது நேரம் இருபுறமும் வேகவைத்து சூடாக வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த புதுவகையான கோக்கலோ ஓரியோ பிரெட் ஆம்லேட் நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது. சில நெட்டிசன்கள் இதை ஒருமுறையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர். சிலர் இதை அப்படியே அருகில் உள்ள கால்வாயில் கொட்டி விடுங்கள் என கூறியுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications