தேவாலயத்தின் பெயரால் கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: மத்திய அரசு கடும் அதிருப்தி!
டெல்லி: கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் கச்சத்தீவில் ரூ.1 கோடி செலவில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட திங்கட்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளது இலங்கை.
இலங்கை வடக்கு மாகாண கடற்படை தளபதி பியல் டி சில்வா தேவாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவில் கடற்படை அதிகாரிகள், பிஷப்புகள் கலந்து கொண்டனர். கச்சத்தீவை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கடற்படை முகாம் அமைக்கவே முதல்கட்டமாக தேவாலயத்தை இலங்கை கட்டுவதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு தெரியாமல் தேவாலயம் கட்டுவது குறித்து தேசிய மீனவர் பேரவை அமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்திய தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications