புராரி "மாஸ்" தற்கொலை.. விடை தெரியாத கேள்விகள்... புரியாத புதிரானது 11 பேரின் இறுதி முடிவு
புராரி கொத்தாக 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சில புரியாத புதிர்கள் உள்ளன.
டெல்லி: டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சில விடை தெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.
டெல்லியில் கடவுளை ரட்சிக்க செல்வதாக 11 பேர் மூட நம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தினம் ஒரு தகவல் இந்த வழக்கில் போலீஸாருக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. இதுவரை10-க்கும் மேற்பட்ட டைரிகள் மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்வதற்காக தங்களது ஃபர்னிச்சர் கடையிலிருந்து 5 ஸ்டூல்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

புரியாத கேள்வி
அதுபோல் கழுத்தை இறுக்கும் ஒயர்களையும் எடுத்துச் சென்றனர். இவையெல்லாம் சிசிடிவி கேமராவில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் சில புரியாத கேள்விகளும், வெளிவராத உண்மைகள் உள்ளன.

சிற்றுண்டி
தற்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வீட்டுக்கு வந்ததும் சமையலறையில் சென்று பார்த்துள்ளனர். அந்த குடும்பத்தினர் மறுநாள் சிற்றுண்டி செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மறுநாள் சிற்றுண்டி தயார் செய்ய கடலை பருப்பை நீரில் ஊற வைத்திருந்தது தெரியவந்தது.

சாவது என்றால்...
தயிர் செய்வதற்காக பாலை உரைவிட்டிருந்தனர். சாவது என்றால் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும். டைரியில் எழுதியுள்ளது போல் லலித் அவரது தந்தையின் ஆத்மா போல் செய்வார் என்றால் இது ஏன் நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் மற்றும் அவரது மகள் சுஜாதா ஆகியோருக்கு ஏன் தெரிந்திருக்கவில்லை. போலீஸார் விசாரணையில் டைரியில் உள்ளவை உண்மையில்லை என்று கூறியிருந்தனர்.

திருமண ஏற்பாடு
இறைவனை அடைய வேண்டும் என்று குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தால் இது அவரது உறவினர்களுக்கு தெரியாமல் போனது ஏன். நாராயணி தேவியின் பேத்தி பிரியங்காவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். சாவது என்று முடிவு செய்திருந்தால் திருமண ஏற்பாடுகளை அவர்கள் ஏன் செய்தனர். எனவே இந்த 11 பேர் தற்கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது தூண்டிவிடப்பட்ட தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications