"புது காம்பினேஷன்".. இந்திய அணியை புரட்டி போட்ட சம்பவம்.. இன்று நடக்க போகும் ட்விஸ்ட்.. பின்னணி
கவுகாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இன்று இந்திய அணியில் யார் யார் ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில் 108 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
அதன்பின் இறங்கிய இந்திய அணி சூர்யா குமார் அதிரடியால் சிறப்பாக ஆடியது. 2 விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் இந்திய அணி வென்றது.

பும்ரா
இந்த தொடரில் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு முதுகில் தசை பகுதியில் பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் அவர் ஆடவில்லை. அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்கு திரும்பி வந்தார். ஒரு போட்டி மட்டுமே ஆடிய அவர் மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார்.

காயம்
தற்போது இந்த காயம் பெரிதாகி உள்ளதால் அவர் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்திய அணியையே இது கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. தற்போது மாற்றாக சிராஜை இந்திய அணி எடுத்துள்ளது. சிராஜ் கவுண்டியில் ஆடிக்கொண்டு இருந்தார்.சிராஜ் கவுண்டியில் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். அங்கே வரிசையாக விக்கெட்டுகளை எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் இந்திய அணியில் தற்போது சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் கடந்த 3 வருடமாக ஐபிஎல்லில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

வாய்ப்பு
உலகக் கோப்பை டி 20 தொடரிலும் இவர் ஆட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த தொடருக்கு முன்பாக இன்று அவருக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படலாம். அவர் எப்படி ஆடுகிறார் என்பதை பார்ப்பதற்காக அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படலாம். ஹர்ஷல் பட்டேல் கடந்த போட்டியில் நன்றாக பவுலிங் செய்தாலும், அடிக்கடி ரன்களை கொடுப்பதால் அவருக்கு பதிலாக சிராஜை வைத்து இந்திய அணி சோதனை செய்து பார்க்க வாய்ப்புகள் உள்ளன.

என்ன நடக்கும்?
ஏற்கனவே உமேஷ் யாதவை டெஸ்ட் செய்து பார்த்த ட்விஸ்ட் இந்திய அணியில் நடந்துவிட்டது. இதனால் சிராஜையும் ரோஹித் இன்று டெஸ்ட் செய்து பார்த்து ட்விஸ்ட் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது இந்திய அணியில் பவுலிங்கில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், சிராஜ் அல்லது ஹர்ஷல் படேல், அஸ்வின், சாகர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications