ஆளுநர் நினைத்தால் தான் எல்லாமே நடக்கும்.. அப்போ ஜம்மு காஷ்மீர் அரசின் அதிகாரங்கள் தான் என்ன?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தலாகும். இப்போது அமையப் போகும் யூனியன் பிரதேச அரசுக்கு முன்பு அங்கு இருந்ததை போல அதிக அதிகாரம் இருக்காது. கவர்னருக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. 2014 ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது தேர்தல் நடந்தது. அதன் பிறகு இப்போது தான் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது.

அதிகாரம்: ஆனால், 2014இல் அமைந்த அரசுக்கும் இப்போது அமையப் போகும் அரசுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஏனென்றால் 2014ல் அமைந்தது மாநில அரசு, ஆனால் இப்போது அமையப் போவது யூனியன் பிரதேசத்திற்கான அரசு. இந்த அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2019இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசியலமைப்பின் 3வது பிரிவில் தேவையான சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரம் குறைவு: நமது நாட்டில் பல யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும் கூட டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு மட்டுமே சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. அதில் புதுச்சேரிக்கு இருக்கும் அதிகாரங்களைப் போலவே காஷ்மீருக்கும் இருக்கும். அரசியலமைப்பின் 239A பிரிவில் சட்டங்கள் புதுவையைப் போலவே காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 2019இன் மாநில பவர்களை விளக்கும் சட்டம் கூறுகிறது. அதேநேரம் டெல்லி மாநில அரசுக்கு அதிகாரங்கள் சற்று குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இருந்த வரை பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் மட்டுமே இந்தியாவின் அதிகாரம் காஷ்மீரில் செல்லுபடியாகும் என்பது போல இருந்தது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் இப்போது நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களைப் போலவே காஷ்மீரிலும் மத்திய அரசின் அதிகாரம் நீண்டுள்ளது.
ஆளுநருக்குக் கூடுதல் பவர்: காஷ்மீருக்காக 2019ல் இயற்றப்பட்ட மறுசீரமைப்பு சட்டம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறது. அங்கு அமையும் மாநில அரசுக்கான அதிகாரம் குறைவாகவே உள்ளது. சட்ட ஒழுங்கு, போலீஸ் தவிர வேறு எது சார்ந்த சட்டத்தையும் காஷ்மீர் சட்டசபையால் நிறைவேற்ற முடியாது. அதேபோல பொது பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்தும் காஷ்மீர் அரசால் சட்டத்தை இயற்ற முடியாது.
ஆளுநர் ஒப்புதல் தேவை: நமது நாட்டில் மற்ற மாநிலங்களில் மத்திய சட்டங்களுடன் முரண்படவில்லை என்றால் மாநில அரசுகளால் பொது பட்டியலில் இருக்கும் துறைகள் குறித்த சட்டங்களை உருவாக்க முடியும். ஆனால், காஷ்மீருக்கு இதில் கூடுதல் கண்டிஷன்கள் உள்ளன. அதாவது காஷ்மீரில் எந்தவொரு நிதி மசோதா அல்லது திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்பு லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரை தேவை என்று சட்டம் கூறுகிறது. அதாவது எந்த சட்டம் என்றாலும் ஆளுநரின் ஒப்புதல் தேவை என்ற சூழலை உருவாக்குகிறது.
மேலும், ஆல் இந்தியா சர்வீஸ், ஊழல் விசாரணை முகமைகள் என அனைத்தும் கவர்னர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இது ஆளுநருக்கு அதிகபட்ச அதிகாரங்களைத் தருவதாக இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆனால், முன்பு மாநிலமாக இருந்த போது மாநில அரசுக்கே அதிகபட்ச அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications