சிஎஸ்கே vs குஜராத் ஐபிஎல் பைனல்.. இன்றாவது மேட்ச் நடக்குமா? வானிலை எப்படி? வெதர்மேன் தந்த வார்னிங்
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது.

நேற்று நடக்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை. தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் பெய்த் மழை காரணமாக நேற்று மேட்ச் நடக்கவில்லை. இந்த நிலையில் இன்று மேட்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்: இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று மைதானத்தில் மழை பெய்து கொண்டு இருந்த போது அது பற்றி தொடர்ச்சியாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துக்கொண்டு இருந்தார். மழை குறித்து விடாமல் முக்கிய அப்டேட்களை அவர் வழங்கி வந்தார்.
முதலில் 1 மணி நேரம் மழை பெய்யும் என்று கூறினார். அதன்பின் லேசான சாரல் மழை இருக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் எதிர்பார்க்காமல் வேறு மழை மேகங்கள் வந்ததால் அங்கு வானிலை மாறியதாக அவர் தெரிவித்தார்.
புதிய மழை மேகங்கள் தீவிரம் அடைந்த காரணத்தால் எதிர்பாராமல் மழை நீடித்ததாகவும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே நிற்பது போல இருந்த மழை தொடர்ந்து நீடித்தது.

இறுதியாக அவர் கொடுத்த அப்டேட்டில் 10.30 மணிக்கு மேட்ச் ஆரம்பிக்க முடியாது. அதற்கு பின்பு வேண்டுமானால் ஆரம்பிக்கலாம் என்றார் . ஆனால் அதற்கும் பின்பும் மைதானம் ஈரமாக இருந்த காரணத்தால் கடைசியில் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடக்கும் மேட்ச் தொடர்பாக வானிலை அப்டேட்டை வழங்கி உள்ளார் வெதர்மேன். அதில், தள்ளிவைக்கப்படும் போட்டிக்கா இவ்வளவு அப்டேட் கொடுத்து உள்ளோம். நாளையும் கொஞ்சம் மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளன. மாலை நேரத்தில் மழை பெய்யும். ஆனால் இரவில் பெய்யாது என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
பைனல் மேட்ச்: இன்று நடக்கும் இறுதிபோட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. குஜராத் இடையே இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. கடைசியாக குவாலிபயர் சுற்றில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை வீழ்த்தியது.
முன்னதாக இந்த சீஸனின் முதல் போட்டியிலோ குஜராத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. தற்போது அதே குஜராத் மைதானத்தில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இது ஹோம் மைதானம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு பிட்ச் எதிராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த பிட்ச் குஜராத் அணிக்கு சாதகமான பிட்ச். சென்னை பிட்ச் போல இது ஸ்லோவாக இருக்காது. அதனால் இன்று நடக்கும் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பத்திரனா, துஷார் தேஷ் பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications