அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லுமா? இன்றே முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்?
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அதிமுகவின் சட்ட திட்டங்களின் படி இந்த தேர்வு நடைபெறவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

இதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணியினர் நாடினர்.
இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்ததன் பேரில் சசிகலா பதலளித்தார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் தரப்பினரும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. அப்போது சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பு வெளியானால், அவரால் நியமிக்கப்பட்ட பதவியிடங்கள் காலியாகும். அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதவியும் பறிபோகும். மேலும், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்ற நிலையே தொடரும்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications