இனி வாட்ஸ் ஆப்ல யூ டியூப் பார்க்கலாம்... வந்துவிட்டது வித்தியாசமான அப்டேட்!
இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ டியூப் வீடியோ பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ டியூப் வீடியோ பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இதேபோல் குரூப் வீடியோ கால் என்ற அப்டேட்டும் இதில் வரவுள்ளது.
யூ டியூப் பார்க்கும் அப்டேட்டில் நிறைய வித்தியாசமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது வாட்ஸ் ஆப் பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் யூ டியூப் நிறுவனத்துடன் கஷ்டப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறது.

வாட்ஸ் ஆப் அப்டேட்
பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

வாட்சப் குரூப் வீடியோ
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ கால் பேசும் வசதி வந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அப்டேட் வர இரண்டு வாரம் ஆகும். முன்பு ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால் இந்த அப்டேட்டில் நாம் இருக்கும் குரூப்பில் உள்ள அனைவரிடமும் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். வீடியோ கான்பிரண்ஸ் கால் வசதி என்று இது அழைக்கப்படுகிறது.

வாய்ஸ் நோட்
இதுவரை இருந்த வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை அதில் இருக்கும் மைக் சிம்பலை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.

இனி யூ டியூப் பார்க்கலாம்
அதேபோல் புதிய அப்டேட்டில் இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்ல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால் நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே வாட்ஸ் ஆப்பிலேயே அதை பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் சாட்டும் செய்ய முடியும். அதேபோல் வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications