திலிப்குமார் இறந்து விட்டதாக அனுராக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

When director Anurag Kashyap killed Dilip Kumar on Twitter by mistake!
மும்பை : பிரபல ஹிந்தி நடிகர் திலீப்குமார் இறந்து விட்டதாக தவறுதலாக தான் வெளியிட்ட செய்திக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.

சமீபத்தில் ஹார்ட் அட்டாக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேடி வரும் அவர் இறந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார் அனுராக் கஷ்யப். ஆனால், அது தவறுதலாக வெளியான தகவல் என சிறிது நேரத்திலேயே மறுப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டு விட்டார் அனுராக்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் ஜின்கிரண் மரணம் குறித்து அனுதாபச் செய்தி வெளியிட்ட அனுராக், தவறுதலாக திலீப் குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டார். ஆனால், தான் வெளியிட்ட தகவல் தவறானது என அறிந்த அனுராக் உடனடியாக மன்னிப்பு மறுப்புச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், 'திலீப் குமார் குறித்து தான் வெளியிட்ட தகவல் தவறானது என்றும், அத்தகவலை வெளியிட்டதற்காக அனைவரும் தன்னை மன்னிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திலீப் குமாரை அவரது மனைவி சாய்ரா பானு உடனிருந்து கவனித்து வருகிறார். திலிப் குமாரின் உடல் நிலை குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள தகவலில், ‘திலீப் குமாரின் உடல்நிலை தேறி வருவதாகவும், நேற்று காலை அவர் சிறிது டீ அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திலீப் குமார் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நல்லுள்ளங்களுக்கும், அவரது ரசிகர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+