குடிபோதையில் பாரில் ஷீனா கொலை விவரங்களை உளறிய டிரைவர்: ஒட்டுக் கேட்ட இன்பார்மர்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து இந்திராணி தற்போது சிக்கியதற்கு அவரது முன்னாள் டிரைவர் ராய் தான் காரணம்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மும்பையில் வைத்து தனது மகள் ஷீனா போராவை கொலை செய்தார். இந்த வழக்கில் இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்போது சிக்கியதன் விவரம் தெரிய வந்துள்ளது.

டிரைவர்
இந்திராணியின் முன்னாள் டிரைவர் ஷ்யாம் ராய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பார் ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

குடிபோதை
குடிபோதையில் ராய் தனது நண்பர்களிடம் இந்திராணி தனது மகள் ஷீனாவை எப்படி கொலை செய்து அவரது உடலை எரித்தார் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உளறியுள்ளார்.

போலீஸ்
ராய் மற்றும் அவரது நண்பர்கள் இருந்த டேபிளுக்கு பின்னால் உள்ள டேபிளில் போலீசாருக்கு துப்புக் கொடுக்கும் நபர் இருந்துள்ளார். அவர் ராய் கூறிய அனைத்தையும் கேட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

பின்தொடர்தல்
பார் சம்பவத்தை அடுத்து மும்பை போலீசார் ராயை அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பல தகவல்களை சேகரித்தனர். அப்போது இந்திராணி ஸ்பெயினில் இருந்ததால் ராயை அவர்கள் கைது செய்யவில்லை. ராயை கைது செய்தால் இந்திராணி உஷாராகி நாடு திரும்பமாட்டார் என்று போலீசார் நினைத்தனர்.

கைது
இந்திராணி நாடு திரும்பிய பிறகு அவரையும், டிரைவர் ராயையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை குறித்த அனைத்து விவரங்களையும் ராய் தெரிவித்துவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications