சச்சின் போட்ட "பிரேக்"... ஒரு நாள் முழுவதும் தலைவலியில் தத்தளித்த அஞ்சலி!
டெல்லி: வேகத்தை அதிகம் விரும்புபவர் சச்சின் டெண்டுல்கர். அதிலும் கார் ஓட்டும்போது வேகமாக ஓட்டுவதில் கில்லாடி. ஆனால் அந்த வேகம் ஒருமுறை மனைவி அஞ்சலிக்கு ஒரு நாள் முழுவதும் தலைவலியைக் கொடுத்து விட்டதாம்.
குர்கான் அருகே ஒரு விளையாட்டு மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சச்சின் அங்கு பேசும்போதுதான் இந்த மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
விழாவில் சச்சின் பேசியதிலிருந்து...

இங்கிலாந்து போயிருந்தபோது
அப்போது நான் இங்கிலாந்து போயிருந்தேன். அஞ்சலியும் வந்திருந்தார். பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஒரு புதிய காரை உருவாக்கியிருந்தது. அதை பரிசோதனை செய்ய என்னை அணுகினார்கள்.

பிரேக் பிடிச்சுப் பாருங்க
என்னிடம் பீட் பேக் தருமாறும், குறிப்பாக பிரேக் குறித்து சோதித்துப் பார்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். நானும், அஞ்சலியுடன் ஒரு ரவுண்டு கிளம்பினேன்.

வர மறுத்த அஞ்சலி
முதலில் அஞ்சலி வர மறுத்தார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது. சற்று வேகமாகத்தான் காரை ஓட்டினேன். என்ன ஸ்பீடில் போனேனன் என்பதை சொல்ல முடியாது. ஆனால் நல்ல வேகம்.

செம பிரேக்
சரியான வேகத்தில் சென்றாலும் கூட அது நல்ல வேகம்தான். அவர்கள் சொன்னது நினைவுக்கு வர நான் பிரேக்கை பயன்படுத்திப் பார்த்தேன். அப்படி ஒரு வேகத்தில் பிரேக் போட்டால் எப்படி இருக்கும். அதை நானும், அஞ்சலியும் அன்று அனுபவித்தோம்.

ஒரு நாள் முழுக்க தலைவலி
அஞ்சலிக்கு அன்று முழுவதும் சரியான தலைவலி. வலி போகவே இல்லை. இது ஒரு நல்ல அனுபவமாக இன்று வரை உள்ளது என்றார் சச்சின்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications