நல்ல காலமா வந்துருக்கு.. கஷ்ட காலம்... மோடியை வாரும் மமதா!
கொல்கத்தா: மோடி வந்தால் நல்ல காலும் வரும் என்று சொன்னார்கள். ஆனால் உண்மையில் வந்திருப்பது கஷ்ட காலம்தான் என்று மேற்கு வங்க முதல்வரும் திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நடந்த கட்சியின் மாநாட்டில் அவர் பேசுகையில், நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு விலைவாசியை உயர்த்தி வருகிறது. பாஜகவால் மேற்கு வங்கத்தில் பெரிய கட்சியாக ஒருபோதும் உருவெடுக்க முடியாது. வர முடியாது.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத் தொடங்கி விட்டது. ரயில் கட்டணத்தை உயர்த்தி விட்டது, சரக்குக் கட்டணத்தை உயர்த்தி விட்டது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பலவற்றைப் பேசியது பாஜக. ஆனால் இப்போது அப்படியே பின் வாங்கி விட்டது.
மேற்கு வங்கத்தில் ஒரே ஒரு சீட்டில்தான் பாஜகவால் வெல்ல முடிந்தது. அவர்களுக்கு அதற்கு மேல் கிடைக்காது. இதற்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அடுத்த பொதுத் தேர்தலில் இது கூட கிடைக்காது. முட்டைதான் கிடைக்கும்.
மதவாத அரசியலில் ஈடுபட பாஜக முனைகிறது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்கத்தில் மதவாதத்திற்கு இடமே இல்லை என்றார் அவர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications