ஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்!
ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆதார் எங்கெல்லாம் தேவைப்படும் ? முழு தகவல் !- வீடியோ
டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.
பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

[வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்]
இதில் ஆதார் பாதுகாப்பானது. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் காரணமாக பின்வரும் விஷ்யங்களுக்கு ஆதார் தேவைப்படுகிறது.
ஆதார் எங்கு அவசியம்?
- ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
- அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும்.
- பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம்.
- மத்திய, மாநில அரசு வகுத்து இருக்கும் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம்.
- ரேஷன் கடைகளில் ஆதார் அவசியம்
- சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அவசியம்.
- வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம்

எதற்கு அவசியம் இல்லை?
- வங்கிக் கணக்குடன் இணைக்கத் தேவையில்லை.
- செல்போன் வாங்க, சிம் கார்ட் வாங்க தேவையில்லை.
- கார், பைக் வாங்கும் சமயத்தில் ஆதார் கொடுக்க வேண்டியதில்லை.
- நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஆதார் அளிக்க வேண்டியதில்லை.
- ஆன்லைன் தொடர்பான வர்த்தகத்தில் ஆதார் தேவையில்லை.
- தனியார் தொடர்பாகி உள்ள எதிலும் ஆதார் அவசியம் இல்லை.
- பள்ளி, கல்லூரியில் சேர அவசியம் இல்லை.
- மருத்துவ சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை.
- உணவு உள்ளிட்ட அடிப்படை உரிமை சார்ந்த சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications