எந்த பாலிவுட் நடிகை உயரமானவர்?: அரசு வேலைக்கான தேர்வில் கேட்கப்பட்ட 'திடுக்' கேள்வி
டெல்லி: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் எந்த பாலிவுட் நடிகை உயரமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைகளில் அளிக்கப்பட்ட வினாத்தாளை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் ஒரு கேள்வியில் எந்த பாலிவுட் நடிகை உயரமானவர் என்று கேட்கப்பட்டு அதற்கு பதிலாக ஹூமா குரேஷி, கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரின் பெயர்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த நான்கு பேரில் ஒருவரின் பெயரை தேர்வாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
எந்த மாதத்தில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு கேள்வியில் அனைத்து பெண்களும் பூனைகள், அனைத்து பூனைகளும் எலிகள் இதை லாஜிக் மூலம் தீர்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தலைவர் ஏ. பட்டாச்சார்யா கூறுகையில்,
இது மோசமான கேள்விகள். இதை பார்த்து வேதனை அடைந்தேன். கேள்விகளை சில ஆசிரியர்கள் தயாரிக்க அதை நிபுணர்கள் குழு ஒன்று தேர்வு செய்தது என்றார்.
இந்நிலையில் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேரளாவில் உள்ள பெண்கள் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பொறுப்பில்லாத வினாத்தாளுக்காக ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் மன்னிப்பு கேட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications