குஜராத்தில் இஸ்லாமியர்களின் 62 % வாக்கு காங்கிரஸ் கட்சிக்கே... இந்தியா டிவி கருத்துக்கணிப்பு முடிவு
டிசம்பர் 9 மற்றும் 14ல் இரண்டு கட்டமாக நடக்க உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் எந்த பிரிவினரின் ஓட்டு யாருக்கு என்று இந்தியா டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அஹமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனல் பறக்கின்றன. இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குஜராத்தில் எந்த பிரிவு மக்களின் வாக்குகள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கிறது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியன்றும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியன்றும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியானது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடித்தளமிடும் என்ற நோக்கில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா டிவி குஜராத் தேர்தலையொட்டி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த பிரிவினர் ஓட்டுகள் எந்தெந்த கட்சியினருக்கு சாதகமாக இருக்கிறது என்ற புள்ளிவிவரமும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி எஸ்டி பிரிவு மக்களில் 47 சதவீத மக்களின் ஓட்டுகள் பாஜவிற்கும், 39 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் 14 சதவீத வாக்குகள் இதர கட்சியினருக்கும் சாதகமாக இருக்கிறது. இதே போன்று எஸ்சி பிரிவு மக்களின் 43 சதவீத வாக்குகள் பாஜகவிற்கும், 45 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும், 12 சதவீத வாக்குகள் இதர கட்சியினருக்கும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவு மக்களின் 51 சதவீத வாக்குகள் பாஜகவிற்கும், 30 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும், 19 சதவீத வாக்குகள் இதர கட்சியினருக்கும் உள்ளது. உயர் வகுப்பை சேர்ந்த 51 சதவீதம் பேரின் வாக்குகள் பாஜகவிற்கும், 31 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் 18 சதவீத வாக்குகள் மற்ற கட்சியினருக்கும் கிடைத்துள்ளது.
இஸ்லாமிய மக்களைப் பொருத்த வரை பெரும்பாலான ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே உள்ளது. குஜராத் இஸ்லாமிய மக்களில் 62 சதவீதம் பேரின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கும் 19 சதவீத வாக்குகள் மட்டுமே பாஜகவிற்கும் உள்ளது. இதர கட்சியினருக்கும் பாஜகவிற்கும் 1 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் 18 சதவீத வாக்குகள் இதர கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications