துல்லியம்.. ரிசல்ட்டோடு அப்படியே பொருந்துதே! பாஜகவின் பிரமாண்ட வெற்றியை அடித்துச்சொன்ன எக்சிட் போல்!
போபால்: மத்திய பிரதேசத்தில் டஃப் ஃபைட் இருக்கும் என்றே பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இன்றைய ரிசல்ட், பாஜகவுக்கு பிரமாண்ட வெற்றியை அளித்துள்ளது. எக்ஸிட் போல் கணிப்புகளில் ஓரளவுக்கு துல்லியமாக கணித்தது யார்?
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி பெரும் போட்டியைக் கொடுத்தது. இதனால் அங்கே கடும் போட்டிச் சூழல் இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், மத்திய பிரதேசத்தில் கடுமையான இழுபறி நிலவும் என்றே கணித்தன.

அதாவது, 10க்கும் மேற்பட்ட ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான போட்டி இருக்கும், தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு அதிகம் என்று கணித்திருந்தன. 4 நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள், பாஜக ஆட்சி அமையும் என்று தெரிவித்திருந்தன.
இவற்றில், இந்தியா டுடே மற்றும், நியூஸ் 24 நிறுவனங்களின் எக்சிட் போல் கணிப்புகள், இன்றைய ரிசல்ட் உடன் ஓரளவுக்கு பொருந்தி வந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்:
பாஜக: 161 இடங்கள்
காங்கிரஸ்: 67 இடங்கள்
மற்றவை: 2
இந்த ரிசல்ட்டுக்கு நெருக்கமான எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்ட நிறுவனங்கள் பின்வருமாறு:
இந்தியா டிவி - CNX எக்ஸிட் போல் முடிவுகள்
பாஜக: 140-159 இடங்கள்
காங்கிரஸ்: 70 - 89 இடங்கள்
மற்றவை: 0 - 3
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
பாஜக: 140 - 162
காங்கிரஸ்: 68 - 90
மற்றவை: 0 - 3
நியூஸ் 24 - டுடேஸ் சாணக்கியா எக்ஸிட் போல்
பாஜக: 139 - 163
காங்கிரஸ்: 62 - 86
மற்றவை: 1 - 9












Click it and Unblock the Notifications