₹1.17 கோடிக்கு ஒரு நம்பர் பிளேட்டா? இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் நம்பர் இதுதான்
சண்டிகர்: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கி நாம் பார்த்து இருப்போம். ஆனால், ஒரு நம்பர் பிளேட்டை கோடி ரூபாய் கொடுத்து வாங்கி பார்த்து இருக்கிறீர்களா? 'HR88B8888' என்ற இந்த பிளேட் தான் ஹரியானாவில் ரூ. 1.17 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கார் நம்பர் பிளேட் என்ற சாதனையை படைத்துள்ளது..
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கார் வாங்குவதே ஆடம்பரமான ஒரு விஷயமாக இருந்தது. வீதிக்கே ஓரிருவர் வீட்டில் மட்டுமே கார் இருக்கும். காரின் விலையும் கூட அந்தளவுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் கார் மிடில் கிளாஸ் மக்களுக்குக் கிட்டத்தட்ட அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. வீதிக்குக் குறைந்தது 10 கார்களை பார்க்க முடிகிறது.

பேன்சி நம்பர் பிளேட்
அதேபோல முன்பு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் நம்பர்கள் எல்லாம் ஆட்டோமெட்டிக் பிராசஸாகவே இருக்கும். ஆனால், சிலர் தங்கள் வாகனங்களுக்கு இந்த குறிப்பிட்ட நம்பர் தான் தேவை என கேட்க ஆரம்பித்தனர். இதனால் பேன்சி நம்பர்களை தனியாக விற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பெரும்பாலான மாநிலங்களில் பேன்சி எண்கள் ஏலம் விடப்படுகிறது.
ஏல நடைமுறை
ஹரியானா மாநிலத்தில் விஐபி மற்றும் ஆடம்பர பதிவு எண்கள் ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட எண்கள் ஏலத்தில் வரும்.. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை தங்களுக்குப் பிடித்த எண்களுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணி வரை ஏலம் நடக்கும். அதில் யார் அதிக தொகை கேட்கிறார்களோ.. அவர்களுக்கே குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்படும்.
அதிக விலை
இதற்காக அம்மாநில அரசு தனியாக ஒரு இணையதளத்தையே உருவாக்கியுள்ளது. இந்த வாரத்தில் 'HR88B8888' என்ற நம்பர் பிளேட்டிற்கு அதிகபட்சமாக 45 விண்ணப்பங்கள் வந்தன. பலரும் விண்ணப்பித்து இருந்ததால் இந்த நம்பருக்கு அடிப்படை ஏல விலை ரூ.50,000ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், இந்த நம்பரை வாங்கப் பலரும் போட்டிப் போட்டார்கள். இதனால் ஒவ்வொரு நிமிடமும் இதன் ரேட் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. நண்பகல் 12 மணிக்கே இந்த நம்பரின் விலை ரூ. 88 லட்சமாக அதிகரித்தது. இறுதியில் மாலை 5 மணிக்கு ஏலம் முடியும்போது இந்த நம்பரின் ரேட் ரூ.1.17 கோடியாக உயர்ந்தது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வண்டி நம்பர் என்ற சாதனையை இது படைத்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் இதுபோல தான் 'HR22W2222' என்ற பதிவு எண் ரூ. 37.91 லட்சத்திற்கு ஏலம் போய் இருந்தது. ஆனால், இப்போது அதை முறியடித்து இந்த நம்பர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
என்ன காரணம்
இந்த 'HR88B8888' என்பது ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படும் பேன்சி அல்லது விஐபி வாகன பதிவு எண்ணாகும். இதில் 'HR' என்பது ஹரியானா மாநில குறியீடு! இது வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. '88' என்பது ஹரியானா மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தைக் குறிக்கிறது. 'B' என்பது குறிப்பிட்ட RTOக்குள் வாகன சீரியஸை குறிக்கிறது. '8888' என்பது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு இலக்க பதிவு எண்ணாகும்!
இதில் விஷயம் என்னவென்றால் பி என்ற ஆங்கில எழுத்தை வண்டியில் போடும்போது பெரிய பி லெட்டராக 'B' என்ற போடுவார்கள். இதனால் பார்க்கும்போது வரிசையாக 7 முறை நம்பர் 8 வருவது போல இருக்கும். இதுவே இந்த நம்பரை தனித்துவமாக மாற்றுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications