மோடி அமைச்சரவை.. யாருக்கெல்லாம் பதவி தெரியுமா? மாநிலங்கள் வாரியாக உத்தேச லிஸ்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. ஜூன் 09ஆம் தேதி இரவு 07.15 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்க உள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. JDU மற்றும் TDP உள்ளிட்ட NDA கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. எனவே முக்கிய கூட்டணி கட்சிகள் சில குறிப்பிடத்தக்க அமைச்சரவை பதவிகளுக்கு போட்டி போடுகின்றனர்.

பாஜக சீனியர் தலைவரும், லக்னோ எம்.பி.யுமான, ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு அமைச்சராக இம்முறையும் பதவியேற்க வாய்ப்புள்ளது. முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வேளாண் துறை வேண்டும் என்று கேட்டு வருகிறாராம். சரி எந்தெந்த மாநிலங்களில் இருந்து யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது என்பது குறித்து இதுவரை வந்த டெல்லி வட்டார தகவல்களை வைத்து ஒரு தகவல் இதோ..

மாநிலம் அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள்
பீகார் ஜிதன் ராம் மஞ்சி (HAM), லல்லன் சிங் (JDU), சுனில் குமார் (JDU), கௌசலேந்திர குமார் (JDU), ராம்நாத் தாக்கூர் (JDU), சஞ்சய் ஜா (JDU), ஜிதின் பிரசாத் (BJP), ராஜீவ் பிரதாப் ரூடி (BJP), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), நித்யானந்த் ராய் (பாஜக), சிராக் பாஸ்வான் (எல்ஜேபி)
உத்தரப்பிரதேசம் ராஜ்நாத் சிங் (பாஜக), அனுப்ரியா படேல் (மிர்சாபூரில் இருந்து அப்னா தளம் தலைவர்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரிய லோக்தளம் தலைவர்)
கர்நாடகா எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்), பிரஹலாத் ஜோஷி (பாஜக), பசவராஜ் பொம்மை (பாஜக), கோவிந்த் கார்ஜோல் (பாஜக), பிசி மோகன் (பாஜக)
மகாராஷ்டிரா பிரதாப்ராவ் ஜாதவ் (பாஜக), நிதின் கட்கரி (பாஜக), பியூஷ் கோயல் (பாஜக)
மத்திய பிரதேசம் ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக), சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)
தெலுங்கானா கிஷன் ரெட்டி (பாஜக), ஈடலா ராஜேந்தர் (பாஜக), டிகே அருணா (பாஜக), டி அரவிந்த் (பாஜக), பாண்டி சஞ்சய் (பாஜக)
ஒடிசா தர்மேந்திர பிரதான் (பாஜக), மன்மோகன் சமால் (பாஜக)
ராஜஸ்தான் கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக), துஷ்யந்த் சிங் (பாஜக)
கேரளா சுரேஷ் கோபி (பாஜக)
வங்காளம் சாந்தனு தாக்கூர் (பாஜக)
ஆந்திரப் பிரதேசம் டக்குபதி புரந்தேஸ்வரி (பாஜக), கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (டிடிபி)
ஜம்மு ஜிதேந்திர சிங் (பாஜக), ஜுகல் கிஷோர் சர்மா (பாஜக)
அசாம்& வடகிழக்கு சர்பானந்தா சோனோவால் (பாஜக), பிஜூலி கலிதா மேதி (பாஜக), கிரண் ரிஜிஜு (பாஜக), பிப்லாப் தேவ் (பாஜக)

உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு போன்ற முக்கிய அமைச்சகங்களை பாஜக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் இடம் பெறுவது உறுதி. முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், பசவராஜ் பொம்மை, மனோகர் லால் கட்டார், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கடும் போட்டியாளர்களாக உள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின், ராம் மோகன் நாயுடு, ஜேடியூவின் லாலன் சிங், சஞ்சய் ஜா மற்றும் ராம்நாத் தாக்கூர், எல்ஜேபியின் சிராக் பாஸ்வானுடன் இணைந்து புதிய அரசு கேபினெட்டில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை அமைக்கும் போது மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் கொடுக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபரிலும், பீகாரில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுதான் கேபினெட்டில் எதிரொலிக்கப்போகிறது.

மகாராஷ்டிராவில் இருந்து, பிரதாப்ராவ் ஜாதவ், நிதின் கட்கரி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் அமைச்சராக கூடும். மத்திய பிரதேசத்தில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அமைச்சரவையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+