இந்தியாவின் "ரியல்" உரிமையாளர்கள் யார் தெரியுமா! அடுத்து ராகுல் சொன்ன வார்த்தை! அதிர்ந்த கூட்டம்
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டின் உரிமையாளர்கள் யார் என அவர் பேசிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மோடி பெயர் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே சூரத் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்பி பதவியைப் பெற்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் கலந்து கொண்ட அவர், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் உரையாற்றினார்.
ராகுல் காந்தி: இதனிடையே மீண்டும் எம்பி பதவி கிடைத்த பிறகு முதல்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்குச் சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த அவர், முதலில் நீலகிரியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் சாலை மார்க்கமாக வயநாடு சென்றார். அங்கு நேற்றும் இன்றும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று பழங்குடியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "ஆதிவாசி என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ஆதிவாசி என்ற வார்த்தைக்கு நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்று பொருளாகும். நாம் வாழும் பூமி குறித்துக் குறிப்பிட்ட ஞானம், புரிதல் மற்றும் தொடர்பைக் கொண்டவர்கள் என்பதே இதன் அர்த்தம். ஆதிவாசி என்ற வார்த்தை நமது பழங்குடி சகோதர சகோதரிகள் தான் நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது.
உரிமையாளர்: நாட்டின் அசல் உரிமையாளர்களுக்குத் தான் நிலம் மற்றும் காடுகளுக்கு முதல் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அந்த உரிமையை நாம் வழங்க வேண்டும், அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். நாட்டின் உண்மையான உரிமையாளர்களாகிய உங்கள் குழந்தைகள் பொறியியல், டாக்டர், வழக்கறிஞர் என விரும்பியதைப் படிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதேநேரம் காடுகளிலும் உங்களுக்கான உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிலத்தின் உரிமையை நீங்கள் பெற வேண்டும் காட்டில் இருந்து கிடைக்கும் பொருட்களுக்கு முதல் உரிமை உங்களுக்குத் தான் இருக்க வேண்டும். அதேநேரம் இப்போது சிலர் 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது இந்தியாவின் உண்மையான உரிமையாளர்கள் நீங்கள் தான் என்பதை மறுக்கிறது. இது உங்களைக் காட்டுக்குள் சுருக்கப் பார்க்கிறது.

தப்பான வார்த்தை: வனவாசி என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் காட்டில் உள்ளவர், நீங்கள் ஒருபோதும் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியே வந்து படிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இந்த வார்த்தை வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சிதைக்கிறது.. இந்தியாவுடன் உங்களது உறவின் தாக்குதலாக இது இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை, ஆதிவாசிகள் என்பதே சரி.. உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது பலருக்கும் பேஷனாகிவிட்டது. ஆனால், உண்மையில் சில நூறு ஆண்டுகளாகவே இந்த நவீன சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தான் சுற்றுச்சூழலை அழித்து, காடுகளை எரித்து, மாசுபாட்டை உருவாக்கினர். இப்போது திடீரென சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிறார்கள்.
கற்க நிறைய இருக்கு: ஆனால், நமது பழங்குடியினரை உலகம் பார்க்க வேண்டும். அவர்கள் 3,000-5,000 ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள்.. உங்கள் வரலாற்றிலிருந்து, உங்கள் பாரம்பரியத்திலிருந்து, உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்ளப் பல விஷயங்கள் இருக்கிறது. சுற்றிச்சுழல் மாசு மட்டுமின்றி ஒருவரை மதிக்க வேண்டும்... ஒரு பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்பதை என உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளப் பல விஷயங்கள் உள்ளன.
உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவமனைகள், சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இதற்காக உங்களுக்கு உதவ நாங்கள் ரெடியாக இருக்கிறோம். உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications