ஒரு டீ விற்பவரைவிட.. உங்கள் பிரச்னையை யாரால் புரிந்து கொள்ள முடியும்... அசாமில் மோடி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒரு டீ விற்பவரை விட உங்கள் பிரச்சினையை யாரால் புரிந்து கொள்ள முடியும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

Who can understand the problems of tea workers better than a chaiwala says PM Modi in Assam

அசாம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அசாம் மாநிலத்தில் மீண்டும் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "அசாம் மாநிலத்தின் தனித்துவத்துவமான தேயிலை அழிக்க முயல்பவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு அளிக்கிறார்கள். அப்படியே இங்கு வந்து தேயிலை தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்கிறார்கள். அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் பாருங்கள். ஒரு டீ விற்பவரை விட உங்களது பிரச்சினையை யாரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்" என்று மிகவும் உருக்கமாகப் பேசினார்.

அசாம் மாநிலத்தில் தற்போது சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 126 இடங்களைக் கொண்ட அசாம் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மீது அசாம் மக்கள் பாஜக மீது கடும் எதிர்ப்பில் உள்ளனர்.

இருந்தாலும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு மீது மக்களுக்கு எதிர்ப்பு உணர்வு பெரும்பாலும் இல்லை என்பதால் இத்தேர்தலில் வென்றுவிட முடியும் என்று பாஜக நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+