மோடியின் பிரதமர் கனவை கலைத்து, ராகுலை கடுப்பேற்றுவது யார் தெரியுமா?
டெல்லி: பாஜக பிரதமர் மோடியின் தூக்கத்தையும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் மன அமைதியையும் கெடுப்பது யார் என்று உங்களுக்கு தெரியுமா?
முன்னணி செய்தி தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கொசு வடிவில் துரத்து, துரத்து என்று துரத்தும் காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் கெஜ்ரிவால் செய்யும் சேட்டைகள் காமெடியாக உள்ளது.

மோடி
தன் படுக்கையில் படுத்து ஜனாதிபதி பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தான் பிரதமராக பதவி ஏற்பது போன்று மோடி கனவு காண்கிறார். அந்த நேரம் பார்த்து கெஜ்ரிவால் கொசு வடிவில் வந்து அவர் கனவை கலைத்து படாதபாடு படுத்துகிறார்.

கடுப்பு
கொசு வடிவில் இருக்கும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளை கேட்டு கடுப்பான மோடி அவரை விரட்டிவிட்டு ஜன்னல் கதவுக்கு ஆணி அடித்துவிட்டு மீண்டும் தனது பிரதமர் கனவை தொடர்கிறார்.

அம்பானி
மோடியின் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட ஜெக்ரிவால் கொசு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொகுசு வீட்டுக்கு செல்கிறது. அங்கு அவரை ஆத்திரமடையச் செய்கிறது அந்த கொசு. முகேஷ் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் தங்கக் காசுகளை கொட்டி வைத்த அறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார். உடனே கெஜ்ரிவால் கொசு அந்த அறையின் கதவை பூட்டிவிடுகிறது.

ராகுல்
ராகுல் காந்தி மேடையில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கெஜ்ரிவால் கொசு அவரை மிரண்டு ஓட வைக்கிறது.

தர்ணா
ஓட்டம் பிடிக்கும் ராகுல் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்த கொசுவை பிடித்து தூக்கி வீசுகிறார். உடனே அந்த கொசு போராடப் போகிறேன் என்று தர்ணா என்று எழுதப்பட்ட பிளக்கார்டை காட்டுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications