Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா ரஷ்ய மாடல் தெரியுமா.. யார் அவர்? சுவாரசிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: பவன் கல்யாணை அவரது மனைவி அன்னா லெஷ்னேவா ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், யார் அவர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கிறது.. யார் இந்த அன்னா லெஷ்னேவா.. பவன் கல்யாண் இவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மிக பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்குள்ள 175 சீட்களில் 135இல் வென்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார்.

Pawan Kalyan Andhra Pradesh

ஜனசேனா: அதேநேரம் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது அவர் ஆந்திர துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் செய்தது மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே வீடு திரும்பிய பவன் கல்யாணை அவரது மனைவி அன்னா லெஷ்னேவா வரவேற்றார். பவன் கல்யாணுக்கு ஆரத்தி எடுத்த அன்னா லெஷ்னேவா, நெற்றில் குங்குமத்தை இட்டு வரவேற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அப்போது தான் பலரும் பவன் கல்யாணின் மனைவி யார் என்பது குறத்து இணையத்தில் தேட தொடங்கினர். யார் அவர்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அன்னா லெஷ்னேவா: அன்னா லெஷ்னேவா 1980இல் ரஷ்யாவில் பிறந்தார். அவர் ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார்.. அவர் 2011இல் வெளியான பவன் கல்யாணின் டீன் மார் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.. படப்பிடிப்பின் போது தான் இருவரும் முதலில் சந்தித்துள்ளனர்.. இருவரும் பழகிய நிலையில், நட்பு அப்படியே காதலாக மாறி இருக்கிறது.

இரண்டு வருடம் டேட்டிங்கிற்குப் பிறகு, அவர்கள் 2013 செப்டம்பர் 30ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். லெஷ்னேவா பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி ஆவார். பவன் கல்யாண் முதலில் 19 வயதான நந்தினி என்ற பெண்ணை 1997இல் திருமணம் செய்து கொண்டிருந்தார். 2007இல் அவரிடம் விவாகரத்து பெற்ற பவன் கல்யாண் 2009இல் நடிகை ரேனு தேசாயை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் திருமணமும் 2012இல் முடிவுக்கு வரவே லெஷ்னேவாவை 203இல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகள்: இந்த தம்பதிக்குத் தம்பதியருக்கு மார்க் ஷங்கர் பவானோவிச் என்ற மகன் உள்ளார். அதேபோல லெஷ்னேவாவுக்கு தனது முதல் திருமணத்திலிருந்து போலேனா அஞ்சனா பவனோவா என்ற மகள் உள்ளார். இருவரும் இப்போது பவன் கல்யாண் உடனேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய லெஷ்னேவா, இப்போது சிங்கப்பூரில் பிரபல உணவகத்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் இரண்டிலும் அவருக்குப் பல நூறு கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வதந்திகள்: அதேநேரம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டதாகவும் கூட கடந்த காலங்களில் தகவல் பரவியுள்ளன. ஏனென்றால் இடையில் சில மாதங்கள் பவன் கல்யாண் வீட்டில் நடந்த முக்கியமான குடும்ப விழாக்களில் ​​அன்னா லெஷ்னேவா கலந்து கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பவன் கல்யாணின் தேர்தல் பிரச்சாரங்களில் அன்னா லெஷ்னேவாவும் கலந்து கொண்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+