சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை தலைவராக உயர்ந்த எடியூரப்பா!
தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக மீண்டும் அரியணை ஏறியுள்ளார்.
Recommended Video

பெங்களூரு தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக அரியணை ஏறியுள்ளார்.
பூகனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர், பல சிக்கல்கள் இழுபறிகளுக்கு நடுவே இன்று கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார்.
மாண்டியா மாவட்டம் கேஆர் தாலுக்கா, பூகனகெரேவில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார்.எடியூரப்பாவின் பெற்றோர் சித்தலிங்கப்பா- பட்டதாயம்மா ஆவர். தும்கூர் மாவட்டம் எடியூரில் உள்ள கோவிலில் உள்ள கடவுளின் பெயராக அவருக்கு எடியூரப்பா என பெயர் சூட்டப்பட்டது.

4 வயதில் தாயை இழந்தார்
நான்கு வயதாக இருக்கும்போதே தாயை இழந்தார் எடியூரப்பா. மாண்டியாவில் கல்லூரி படிப்பை முடித்தார். 1965 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த அவர் பின்னர் அந்த பணியை உதறிவிட்டு ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள வீரபத்ரா சாஸ்திரி சங்கர் ரைஸ் மில்லில் கிளர்க்காக பணியை தொடங்கினார்.

ஓனர் மகளை மணந்தார்
1967ஆம் ஆண்டு ரைஸ் மில் உரிமையாளரின் மகள் மைத்திரி தேவியை மணந்தார் எடியூரப்பா. பின்னர் ஷிவமோகாவில் ஹார்டுவேர் கடையை திறந்தார். எடியூரப்பாவுக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரண்டு மகன்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

2004ல் மனைவியை இழந்தார்
எடியூரப்பாவின் மனைவி மைத்திரி தேவி 2004ஆம் ஆண்டு சம்பில் நீர் எடுத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். எடியூரப்பா கல்லூரி நாட்களிலேயே ஆர்எஸ்எஸில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக எடியூரப்பா உயர்ந்தார்.

பாஜக மாநில தலைவரானார்
அதன்பின் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி தலைவரானார்
1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார் எடியூரப்பா.

விட்டுத்தர மறுத்த குமாரசாமி
கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

7 நாட்கள் முதல்வராக
இதனால், பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது. 7 நாளில் இவரது ஆட்சி கவிழ்ந்தது.

முதல் பாஜக முதல்வர்
பின்னர் 2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். 3ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications