ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போக இவர்தான் காரணமாமே!
Recommended Video
அமராவதி: நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளதான் எறு ஆந்திர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது அமைச்சரவையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சரவையிலேயே ரோஜாவை சேர்க்கவில்லை ஜெகன்.

சரி துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும் என ரோஜாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அப்போதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது தொடர்பாக ஆந்திர செய்தியாளர்கள் மத்தியில் நாம் விசாரித்த போது, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு காரணம் அவரே எனக் கூறினர்.
விரிவாக கூறுங்கள் எனக் கேட்டதற்கு, தேர்தல் முடிவு வந்தவுடன் ரோஜாவின் ஆதரவாளர்கள் ஓவர் தம்பட்டம் அடித்து ஆர்வக்கோளாறில் ரோஜாதான் ஆந்திராவின் கேம் சேஞ்சர் எனக் கொளுத்திப்போட்டனர்.
கடந்த இரண்டாண்டு காலமாக நடையாய் நடந்து அலைந்து திரிந்து மக்களை சந்தித்து ஜெகன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு ஏதோ ரோஜா தான் காரணம் என்கிற அளவுக்கு பேசத்தொடங்கினர் அவரது ஆதரவாளர்கள்.

இது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மாளுக்கும், சகோதரி ஷர்மிளாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போதே இப்படி படாபடமாக செயல்படும் ரோஜா, இன்னும் பதவிக்கு வந்தால் என்ன செய்வார் என ஜெகனின் அக்கா ஷர்மிளா மூத்த நிர்வாகிகளோடு விவாதித்தாராம்.
இதையடுத்து அமைச்சரவையில் ரோஜாவுக்கு கல்தா கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம் . ஜெகன் மீது சற்று வருத்தத்தில் உள்ள ரோஜா, சபாநாயகர் பதவியையாவது தனக்கு தாருங்கள் என ஜெகன் மோகன் ரெட்டி காதில் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதுவும் இப்போது கிடைக்கவில்லை.
நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ரோஜாதான் லேட்டஸ்ட் உதாரணம் என்று ஆந்திராவில் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications