காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம்! சத்தீஸ்கர் அரசியலையே புரட்டிப் போட்டவர்.. யார் இந்த பூபேஷ் பாகல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. யார் இந்த பூபேஷ் பாகல் காங்கிரஸ் இவர் மீது நம்பிக்கை வைக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் என்று 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் தேர்தல் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஒரு காலத்தில் பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் இப்போது காங்கிரஸ் வலுவாக ஆட்சியை நடத்தி வருகிறது.
பூபேஷ் பாகல்: சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கே முதல்வராக பூபேஷ் பாகல் இருக்கிறார். சத்தீஸ்கர் அரசு மீதும் சரி, முதல்வர் பூபேஷ் பாகல் மீதும் சத்தீஸ்கர் மக்களுக்குப் பெரியளவில் அதிருப்தி இல்லை. இதன் காரணமாகவே இந்த முறையும் காங்கிரஸ் கட்சி பூபேஷ் பாகல் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் அங்குள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 68 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சத்தீஸ்கரில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறையாக இருந்தது. ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை எதிர்கொண்ட பாஜகவால் வெறும் 15 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
யார் இவர்: 2018இல் பெற்றது போலவே மீண்டும் ஒரு கலக்கல் வெற்றியை பூபேஷ் பாகல் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையிலேயே காங்கிரஸ் மீண்டும் அவரை முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்த இந்த பூபேஷ் பாகல் குறித்து முக்கிய தகவல்களை நாம் பார்க்கலாம்.
பூபேஷ் பாகல் கடந்த 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ராய்ப்பூரில் பிறந்தார். அவர் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்த முறை சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள பதான் தொகுதியில் பூபேஷ் பாகேல் களமிறங்குகிறார். பூபேஷ் பாகல் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இங்கே இருந்து தான் எம்எல்ஏவாக தேர்வாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பதான் தொகுதி: பதான் தொகுதி சத்தீஸ்கரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவாக இருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் இந்த பதான் தொகுதியில் பூபேஷ் பாகேல் 84,352 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் மோதிலால் சாஹுவை 27,477 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பூபேஷ் பாகல் 1990கள் முதல் காங்கிரஸில் பயணித்து வரும் மூத்த தலைவர்களில் ஒருவராவார். அவர் 1990 ஆம் ஆண்டு காங்கிரஸின் மாவட்ட இளைஞரணித் தலைவராக அரசியலுக்கு வந்தார். 1993இல் அவருக்குச் சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்ட நிலையில், அந்தத் தேர்தலிலேயே வென்று அவர் முதல் முறையாகச் சட்டசபைக்குத் தேர்வானார். பின்னர் 1998, 2003, 2013, 2018 என்று நான்கு முறை அவர் சட்டசபைக்கு அவர் தேர்வானார்.
சத்தீஸ்கர் முதல்வராகத் தேர்வாகும் முன்பு பூபேஷ் பாகல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து போக்குவரத்து அமைச்சராகத் தேர்வானார். மேலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications