ராம் ரஹீமீன் ராஜ்ஜியம் யாருக்கு.. விபாசனாவுக்கா இல்லை ஹனிப்ரீத்துக்கா??
டெல்லி: டுபாக்கூர் சாமியார் ராம் ரஹீமின் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. ராம் ரஹீமீன் சொந்த மகளும், தத்தெடுக்கப்பட்ட மகளும் அடுத்த வாரிசாக உருவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ராம் ரஹீமுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதுதவிர ஹனிபிரீத் இன்சான் (ஒரிஜினல் பெயர் பிரியங்கா தனேஜா) என்பவரையும் தத்தெடுத்து தனது மகளாக அறிவித்துள்ளார். இதில் சொந்த மகளான விபாசனா இன்சான்தான், ராம் ரஹீம் நிறுவிய தேரா சச்சா செளதாவின் சேர்பெர்சனாக இருந்து வருகிறார்.

அடுத்த வாரிசு யார்
தற்போது ராம் ரஹீமை தூக்கி சிறைக்குள் போட்டு விட்டதால் அவரது அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யார் வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

விபாசனா
விபாசனாவுக்கு 35 வயதாகிறது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் நேராக தனது தந்தையின் அமைப்பில் சேர்ந்து விட்டார். தற்போது நம்பர் 2 ரேங்க்கில் அதில் இருக்கிறார்.

ஹனிப்ரீத்
ரஹீம் ஆதரவாளர்கள் ஹனிப்ரீத் என்று செல்லமாக அழைக்கப்படும் தத்துப் புத்திரி, விபாசனாவை விட வயதில் இளையவர். இவருக்கும் ஆதரவாளர்களிடயே பெரும் ஆதரவு உள்ளது. எப்போதும் ரஹீமுடன் ஒட்டிக் கொண்டிருப்பார்.

21 வேடத்தில் நடித்த ஹனிப்ரீத்
நடிகையாகவும் வலம் வந்தவர் ஹனிப்ரீத். ஒரு படத்தில் 21 வேடத்தில் நடித்து அதகளம் செய்தவர். இதன் மூலம் ஒரே படத்தில் அதிக வேடங்களில் நடித்த ஜாக்கி சான் சாதனையையும் ஹனி முறியடித்துள்ளார்.

தலைவர் பதவி யாருக்கு?
ராம் ரஹீமீன் மகன் ஜஸ்மீத்தும் தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே விபாசனா அல்லது ஹனிப்ரீத் ஆகியோரில் ஒருவரே அடுத்த வாரிசாக உருவெடுக்கலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications