மே.வங்கத்தில் திரிணாமுல் டாப்! பின்னாலேயே வரும் பாஜக.. ஆனால் இந்தியா கூட்டணிக்கு ஷாக்! ஜீ டிவி சர்வே
கொல்கத்தா: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜீ டிவி நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன.

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை மேற்கு வங்கம் ரொம்பவே முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மேற்கு வங்கத்தில் இருந்து மொத்தம் 42 எம்பிக்கள் லோக்சபா செல்வார்கள். 40+ எம்பிக்களை கொண்ட வெகு சில மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் தான் முதலில் திரிணாமுல் காங்கிரஸ் இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திரிணாமுல் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். இதனால் மேற்கு வங்கத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் நடக்கும் லோக்சபா தேர்தல் குறித்த சர்வே இப்போது வெளியாகியுள்ளது. அதில். மேற்கு வங்கத்தில் 42 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், திரிணாமுல் அதிக சீட்களை பெறும் என்று ஜீ டிவி சர்வே கூறி இருக்கிறது
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களில் வெல்லும் என்று ஜீ டிவி சர்வே கூறியிருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக 17 இடங்களிலும் இந்தியா கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக ஜீடிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம் என்று பார்க்கும் போது திரிணாமுல் காங்கிரஸ் 43% வாக்குகள் கிடைக்கும் என்றும் பாஜக 41% வாக்குகள் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications