பெற்ற மகன், மகளை, தம்பி, தங்கை என்று பல வருடங்களாக கூறி வந்த இந்திராணி
மும்பை: 43 வயதான இந்திராணி முகர்ஜி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் கணவருக்குப் பிறந்த மகளை கொலை செய்து எரித்து காட்டில் உடலைப் போட்டு விட்டதாக கூறி இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திராணி முகர்ஜி, ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி ஆவார்.
இந்த விவகாரத்தில் இந்திராணியின் முதல் கணவர், கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2002ல் திருமணம்
பீட்டர் முகர்ஜியை, இந்திராணி 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது 2வது திருமணம் ஆகும்.

இருவருக்கும் மொத்தமாக 4 பிள்ளைகள்
பீ்ட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் ஒரு மகன் உள்ளார். இந்திராணிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த மகள்தான் ஷீனா. இதுதவிர மிக்கயில் போரா என்ற மகனும் உள்ளார். இந்திராணி, பீட்டர் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர்.

9எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்
2007ம் ஆண்டு பீட்டரும், இந்திராணியும் இணைந்து 9எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார் இந்திராணி. பீட்டர் தலைவராக இருக்கிறார்.

மகளை சகோதரியாக்கினார்
தனது முதல் கணவர் மூலம் பிறந்தவரான ஷீனாவை வெளியுலகுக்கு தனது தங்கை என்றுதான் கூறி வந்தார் இந்திராணி. ஆனால் தற்போதுதான் ஷீனா, இந்திராணியின் மகள் என்று தெரிய வந்து அனைவரும் அதிர்ந்துள்ளனர்.

குவஹாத்தியில் வளர்ந்த ஷீனா
ஷீனாவும், மிக்கயிலும் அஸ்ஸாமில் உள்ள இந்திராணியின் பெற்றோரால் வளர்க்கப்பட்டனர். இவர்களை ஒருபோதும் தனது பிள்ளைகள் என்று இந்திராணி கூறியதே இல்லை. தம்பி, தங்கை என்றுதான் கூறி வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications