ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு.. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் அம்மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருபவர் பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். கடந்த 5 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி தொடர்ந்து வென்றது. இதனால் ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக நவீன் பட்நாயக் நீடித்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் லோக்சபா தேர்தலுடன் ஒடிசாவுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. அதாவது பாஜக 78 இடங்களை கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாததளம் 51 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
இதன்மூலம் 24 ஆண்டு பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதோடு ஒடிசாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில் தான் ஒடிசாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே தான் இன்று ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சேர்ந்து தான் மோகன் மாஜியை புதிய முதல்வராகத் தேர்வு செய்தனர். அவர் நாளை மாலை ஒடிசா மாநில முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
ஒடிசாவின் புதிய முதல்வர் ரேஸில் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இருந்தார். ஆனால் எம்பியாக உள்ள அவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக இன்னொருவரை ஒடிசாவின் முதல்வராகத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வருக்கான ரேஸில் கேபி சிங் டியோ, மோகன் மாஜி ராபி நராயணன் நாயக், சுராமா பாதி, ஜெனரல் கிரிஷ் சந்திர முர்மு ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் மோகன் மாஜி ஒடிசா மாநில முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.. இவர் ஒடிசாவின் பழங்குடியின மக்களின் வாய்ஸாக பார்க்கப்படுகிறார். இவர் 4வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல அம்மாநில துணை முதல்வர்களாக கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications