யார் இந்த தாதா ரவி பூஜாரி? 'ஹேப்பி நியூ இயர்' பட நடிகர்களை குறிவைத்து மிரட்டுவது ஏன்?
மும்பை: நிழல் உலக தாதாவான ரவி பூஜாரி ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிப்பவர்களை மிரட்டி வருகிறார்.
பாலிவுட் நடிகர், நடிகைகளை நிழல் உலக தாதாக்கள் மிரட்டுவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் தற்போது தாதா ரவி பூஜாரி ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்து வரும் ஹேப்பி நியூ இயர் பட நடிகர்களை குறிவைத்து மிரட்டுகிறார்.
இதையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட ஷாருக்கான், நடிகர்கள் போமன் இரானி, சோனு சூத் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யார் ரவி?
மும்பையைச் சேர்ந்தவர் தாதா ரவி பூஜாரி. மும்பையில் தனது குற்ற வேலைகளை துவங்கிய அவர் தனது எதிரியான பாலா ஜால்டேவை கொலை செய்தார். பின்னர் அவர் தாதா சோட்டா ராஜனிடம் சேர்ந்தார்.

துபாய்
1990களின் இறுதியில் ரவி துபாய்க்கு சென்றார். அங்கு அவர் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்தார்.

ஆஸ்திரேலியா
ரவி தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது ஆட்கள் மும்பையில் குறைவில்லாமல் அட்டகாசம் செய்து வருகிறார்கள்.

ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வரும் நடிகர்களில் ஹீரோ உள்பட 3 பேருக்கு ரவி பூஜாரி மிரட்டல் விடுத்துள்ளார்.

ரூ.200 கோடி
ஹேப்பி நியூ இயர் படம் ரிலீஸாகும் முன்பே ரூ.200 கோடி சம்பாதித்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

உரிமம்
பாலிவுட் படங்களின் வெளிநாட்டு உரிமத்தை தனக்கு அளிக்குமாறு ரவி அவ்வப்போது மிரட்டுவது உண்டு.

ஷாருக் படம்
ஹேப்பி நியூ இயர் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பெற தான் ரவி இப்படி நடிகர்களை மிரட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications