Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆடையின்றி" பெண்கள்.. 72 வயசு தாத்தாவுக்கு குபீர்னு ஒரு சபலம்.. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம்.. ஓஓ

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: 72 வயது தாத்தாவுக்கு சபலம் வந்துவிட்டது.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா? தலையில் கை வைத்துக்கொண்டு அம்போவென உட்கார்ந்திருக்கிறார்.. என்ன நடந்தது?

1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்.. அந்த கண்ணாடி, எக்ஸ்ரே திறன் பெற்றது, ஆடைகள் இன்றி உடம்பை காட்டும் குணம் கொண்டது, இந்த கண்ணாடி அணிந்து யாரை பார்த்தாலும், அவர்கள் நிர்வாணமாக தெரிவார் என்பார்.

Who is this 72 year old Uttar Pradesh man and why did he loses Rs 9 lakh for Magic Mirror

பூவே பூச்சூடவா: போலி கண்ணாடி: இந்த கண்ணாடியை வைத்துதான் சரிதாவை பார்ப்பார்.. அதன்பிறகே படத்தின் கதை நகரும்.. அதுபோலவே பாசிலின் "பூவே பூச்சூடவா" படத்திலும் இதே போல ஒரு கண்ணாடியை வைத்து நதியா எஸ்வி சேகரை சீண்டி விளையாடுவார்..

இப்படி சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட இந்த கண்ணாடி, நடைமுறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. 2 வருடங்களுக்கு முன்பு, இப்படி ஒரு கண்ணாடியை வைத்துதான் தேனியில் ஒருவர் சிக்கினார்.. சபலிஸ்ட் ஒருவருக்கு, மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாகவும், கண்ணாடியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் ஆசைகாட்டி உள்ளார்..

மாயக்கண்ணாடி: அந்த நபரும், 1 லட்சம் தந்து கண்ணாடியை வாங்கியுள்ளார்.. அந்த கண்ணாடியை எடுத்து மாட்டியதுமே, ஏமாந்து போயுள்ளார்.. அது ஒரு சாதாரண கண்ணாடி என்பது தெரியவந்தது.. சில மாதங்களுக்கு முன்பு, நம்முடைய கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு பின்பக்கம், ஒரு லாட்ஜில் 4 பேர் தங்கியிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தால், அவர்களும் இந்த "வெற்றுக்கண்ணாடியை" சபலிஸ்ட்கள் யாராவது கிடைத்தால், அவர்கள் தலையில் கட்டுவதற்காக ரூம் போட்டுள்ளது தெரியவந்தது.

சபலம்: இதோ இப்போது ஒரு தாத்தா சிக்கியுள்ளார்.. மாயக்கண்ணாடி மூலம் பெண்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று யாரோ சொல்லவும், 72 வயது தாத்தாவுக்கு சபலம், மண்டைக்குள் ஏறிவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் இந்த தாத்தா.. அவரது பெயர் அவினாஷ் குமார் சுக்லா.. எப்பவுமே இளம்பெண்கள் மீது இவருக்கு ஆசை இருக்குமாம்.. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட, சிலர், தாத்தாவிடம் பணம் பறிக்க பிளானை போட்டார்கள்.. இதற்காக நிர்வாண கண்ணாடி பற்றி விலாவரியாக எடுத்து சொன்னார்கள்.

நாசா கண்ணாடி: சிங்கப்பூரை சேர்ந்த பிரபல பழங்கால பொருட்களை சேமிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு, தாத்தாவிடம் இந்த கும்பல் அணுகியிருக்கிறது. ஆனால், எடுத்ததுமே ஆபாச பேச்சை எடுக்காமல், தங்களிடம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பயன்படுத்தும் மாயக்கண்ணாடி ஒன்று இருக்கிறது என்று சொல்லி, தாத்தாவிடம் பொய்யை அவிழ்த்துவிட்டனர்.. இந்த கண்ணாடி மூலமாக எதிர்காலத்தையும் கணிக்கலாம் என்று சொல்லி அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டனர்..

இந்த கண்ணாடி பெண்களை நிர்வாணமாக பார்க்க முடியும் என்று சொல்லி இன்னொரு பொய்யை அவிழ்த்துவிட்டனர். அந்த கண்ணாடியின் விலை ரூ.2 கோடி வரை இருக்கும், அதனால் நாம் அனைவரும் காசு போட்டு, கண்ணாடியை வாங்கி கொள்ளலாம் என்றார்கள். தாத்தாவும் இதை நம்பி, தன்னுடைய பங்காக ரூ.9 லட்சம் தந்துள்ளார். பிறகு, ஒரு கண்ணாடியை தந்துவிட்டு போயிருக்கிறார்கள்..

தாத்தா கண்ணாடி: அந்த கண்ணாடியை தாத்தா வாங்கி ஆசை ஆசையாக மாட்டிக்கொண்டு பார்த்தால், அது வெறுங்கண்ணாடி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, அந்த நபர்களிடம் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். அவர்கள் மிரட்டல் விடுக்கவும், வேறுவழியின்றி போலீசுக்கு போய் புகார் தந்துள்ளார்.

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், சுக்லாவை மிரட்டியது, மேற்கு வங்கத்தை சேர்ந்த பார்த்தா சிங்காராய், மோலயா சர்க்கார், சுதிப்தா சின்ஹாராய் போன்றோர் என்பது தெரிய வந்துள்ளது... சபலிஸ்ட்கள் சிக்கினால், அவர்களிடம் பணத்தை பறிப்பதுதான் இந்த கும்பலின் வேலையாம்..

மொத்த பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 செல்போன், கார், ரூ.28 ஆயிரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றியுள்ளனர். விசாரணையும் நடந்து வருகிறது. ஆனால், தாத்தா இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+