மோப்பம் பிடித்த.. "பாடி கேமராக்கள்".. இதயத்தை உலுக்கிய "ஆக்சல்".. மரணம்.. கண்ணீர்விட்ட ராணுவ வீரர்கள்
ஆக்சல் என்ற மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
லடாக்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டரின்போது ஆக்சல்' என்ற மோப்ப நாய் கொல்லப்பட்டது அதிர்ச்சியை கூட்டி வருவதுடன், அது தொடர்பான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர்..
இதையடுத்து, கடுமையான துப்பாக்கி சண்டைகள் நடந்தன.. அப்போது, மோப்ப நாய் ஆக்சல் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்
பின்னர் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது, ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார், 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.. நேற்று முன்தினம் காலை, வாணிகம் என்ற கிராமத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், ராணுவமும் உடனே இணைந்து, அந்த என்கவுன்டரை ஆரம்பித்துள்ளனர்.

பாடி கேமராக்கள்
இந்த சமயத்தில்தான், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 2 ராணுவ நாய்கள் அனுப்பப்பட்டன.. அந்த நாய்களின் பெயர், பஜாஜ் மற்றும் ஆக்சல்.. இந்த நாய்களுக்கு, "பாடி கேமராக்கள்" அணிந்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன... பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சலை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. 3 குண்டுகள் ஆக்சல் மீது பாய்ந்தது.

பரிதாப ஆக்செல்
ஆக்சல் அங்கேயே சுருண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் சொல்லும்போது,"நாங்கள் பதட்டமடைந்து, கால்நடை டாக்டரிடம் கொண்டு செல்வதற்குள் ஆக்செல் இறந்துவிட்டது... பயங்கரவாதியின் பெயர் அக்தர் ஹுசைன் பட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக நீடித்தது" என்றார்.

போஸ்ட் மார்ட்டம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆக்சலை பொறுத்தவரை நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதல் நாய் ஆகும்.. ஒரு பயங்கரவாதியின் மறைவிடத்தை தெரிந்துக்கொண்டு, அவரை தாக்கி காயத்தை ஏற்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும் ஆக்சல்..

நெகிழ்ச்சி
ஆக்சல் மட்டும், பயங்கரவாதியை இன்னும் நெருங்கியிருந்தால், என்கவுன்டர் வெகு முன்னதாகவே முடிந்திருக்கும், ஆக்சலின் உயிரும் பறிபோயிருக்காது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் ராணுவ வீரர்கள். மோப்ப நாய் ஆக்சல் உயிரிழந்ததையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் ஆக்சலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்... நேற்றைய தினம் ஆக்சலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. இந்த நெகிழ்ச்சி வீடியோக்கள், போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications