மனைவிக்கு இன்னும் ஏன் குழந்தையே பிறக்கல? டாக்டர் சொன்னதை கேட்டு கிறுகிறுத்து நின்ற கணவர்.. ஓ மை காட்
காந்திநகர்: 34 வயதாகியும் திருமணமாகாத நிலையில், ஒருவழியாக திருமணம் செய்து கொண்டுவிட்டார் குஜராத் நபர். எனினும், இவரது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன காரணம்?
கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது.. 35 வயதான நபர் ஒருவர், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.. இவருக்கு திருமணம் செய்ய, "அம்பி டேட் தி தமிழ் வே" என்ற இன்டர்நெட் ஆப் மூலம் பதிவு செய்திருந்தனர். அப்போது, ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாராபுரம் இளைஞருக்கு பழக்கமானார்.

மணப்பெண்: திடீரென அந்த பெண்ணுக்கு கோயிலில் வைத்து தாலி கட்டி வீட்டுக்கு அழைத்து வந்தார் இளைஞர். குடும்பத்தினரும் வேறு வழியின்றி மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டனர். அப்பெண்ணுக்கு தேவையான நகைகள், தங்க தாலிக்கொடி, புதிய பட்டுப்புடவைகள் என அனைத்தையுமே, இளைஞர் குடும்பத்தினரே வாங்கி தந்துள்ளனர். திருமணம் முடிந்து 3 மாதம் புதுமண தம்பதியினர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார்கள்..
ஆனால், இளைஞர் குடும்பத்தினருக்கு, பெண்ணின் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.. அந்த பெண் சொன்ன வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்திருக்கிறார். அதனால், அவரது ஆதார் கார்டை இளைஞரின் குடும்பத்தினர் பார்த்தபோது அதிர்ந்தே போய்விட்டார்கள்..
ஆதார் அட்டை: அந்த ஆதார் அட்டையில், கணவரின் பெயர் சென்னையை சேர்ந்த வேறொருவரின் பெயர் பதிவாகியிருந்ததாம்.. அத்துடன், வயதிலும் ஏகப்பட்ட வித்தியாசம் காணப்பட்டது.. அதற்குபிறகு, புதுமணபெண்ணை, அவரது ஆதார் கார்டுடன், தாராபுரம் மகளிர் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் ஒப்படைத்தனர்.. போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 10 வருடங்களுக்கு முன்பே சென்னையில் கல்யாணம் ஆகி, ஒரு குழந்தையும் இருப்பது தெரிய வந்தது.
இதற்கு பிறகு, கரூரில் போலீஸ்காரர், பிறகு, மதுரையில் இன்னொரு போலீஸ்காரர், கரூரில் ஒரு நிதி நிறுவன அதிபர், என 20-க்கும் மேற்பட்ட நபர்களை இப்பெண் திருமணம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 35 வயதுக்கும் மேற்பட்ட கல்யாணமாக ஆண்களை மட்டுமே குறி வைத்து, விரட்டி விரட்டி காதலித்து கல்யாணமும் செய்து கொண்டு, நகை, பணத்தையும் திருடி கொண்டு, 3வது மாதமே, அந்த வீட்டிலிருந்து கிளம்பி ஓடிவிடுவாராம்.
கல்யாண ராணி: இந்த கல்யாண ராணி குறித்து தாராபுரம் போலீசாரும் நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் தாராபுரம் குடும்பத்தினருக்கு க்ளூவாக இருந்தது, அந்த பெண்ணின் வயதான முகத்தோற்றம்தானாம்..
இதுபோலவே, குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள சர்கேஜ் என்ற பகுதியில் 34 வயது நபர் வசித்து வருகிறார்.. இவருக்கு பல வருடமாகவே, குடும்பத்தினர் எங்கெங்கே பெண் தேடி வந்தநிலையில், கடைசியில் கடந்த வருடம்தான் வரன் பொருந்தி வந்திருக்கிறது. ஆனால், மணப்பெண்ணின் வயது 32 ஆகிறது என்று பெண் வீட்டினர் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், 1991, மே மாதம் பிறந்தவள் என்று மணமகளின் பாஸ்போர்ட்டையும் மாப்பிள்ளை வீட்டினரிடம் காட்டியிருக்கிறார்கள்.
இந்த பாஸ்போர்ட்டை பார்த்த மாப்பிள்ளை வீட்டுக்காரரும், தங்கள் மகனுக்கும் 34 வயதாகிவிட்டதால், 32 வயது மணப்பெண்ணை ஏற்க சம்மதம் என்றார்கள். அதன்படியே, கடந்த ஜூன் மாதம், இவர்களுக்கு திருமணம் தடபுடலாக நடந்தது..
பரிசோதனை: தற்போது திருமணம் நடந்து ஒருவருடத்துக்கு மேலாகிவிட்டது.. ஆனால், இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் குடும்பத்தினரை வாட்டி வதைத்தது.. அதனால், தம்பதி இருவருமே மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிருக்கிறார்கள்.
கணவனுக்கு பரிசோதனை முடிந்த நிலையில், மனைவிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. இறுதியில், "இயற்கையான முறையில் மனைவியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.. அவருக்கு எப்படியும் குறைந்தது 42, 45 வயதிருக்கலாம்" என்று மருத்துவ அறிக்கைகள் வெளியானது.
மாமனார்: இதனை பார்த்ததும் கணவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.. வயதான பெண்ணை, தன்னிடம் போலியான ஆதாரங்களை காட்டி ஏமாற்றிவிட்டார்களே என்று ஆத்திரம் அடைந்து, போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் பேரில் மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கல்யாணத்துக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில், பெண்ணின் படிப்பு சர்ட்டிபிகேட் கேட்டார்களாம். ஆனால், பலமுறை கேட்டும், வயது மற்றும் கல்விச்சான்றிதழை தரவில்லையாம். திருமணத்தன்றுகூட, பள்ளி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஜெராக்ஸ்களை தந்திருக்கிறார்களே தவிர, ஒரிஜினல் சர்ட்டிபிகேட் காண்பிக்கவேயில்லை என்கிறார்கள்.
போலி சான்றிதழ்: அதேபோல, இந்த திருமணத்தை பதிவு செய்யவும், வங்கிப் பணிகளுக்காக கேட்டும்கூட, ஒரிஜினல் சர்ட்டிபிகேட் மனைவி தரப்பில் தரவில்லையாம். இப்போது போலீஸ் வரை விஷயம் வந்துள்ளதால், மனைவி தரப்பில் இந்த மோசடியை ஒப்புக் கொண்டு, மன்னிப்பும் கேட்டு வருகிறார்களாம்.
ஆனாலும், தன்னைவிட 10 வயது பெண்ணுடனா இத்தனை காலம் குடும்பம் நடத்தினேனா? என்று இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறாராம் மாப்பிள்ளை..!!












Click it and Unblock the Notifications