Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிங் மேக்கராக மாறும் கிங்! ஒட்டுமொத்த திரிபுராவையும் திரும்பி பார்க்க வைக்கும் டெப் பர்மா! யார் இவர்

திரிபுரா அரசியலில் டெப் பர்மா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: திரிபுராவில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அனைத்து கட்சிகளை விட திப்ரா மோதா கட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.. அங்குள்ள மன்னர் குடும்ப வாரிசு இப்போது கிங் மேக்கராக உருவெடுக்கப் போகிறார்.

நாடு முழுக்க இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓரிரு மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. இதனால் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது.

இப்போது திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

திரிபுரா

திரிபுரா

இதில் திரிபுரா மாநிலத்திற்கு முதலில் வரும் பிப். 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில், பாஜக கூட்டணி 36 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு ஆட்சியில் இருந்து சிபிஎம் வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இப்போது 5 ஆண்டுகள் கழித்து அங்குத் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக அதேபோல வெல்வது சந்தேகமே.. ஏனென்றால் கடந்தாண்டு பாஜக கூட்டணியில் இருந்து 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மற்ற கட்சிகளில் இணைந்தனர். இது அக்கட்சிக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது.

புதிய கட்சி

புதிய கட்சி

திரிபுராவில் இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தலில் திப்ரா மோதா கட்சியின் (டிஎம்பி) முக்கிய இடத்தை பிடிக்கும். டிஎம்பி கட்சி கடந்த 2019இல் ஆரம்பிக்கப்பட்டது. பழங்குடியின் சமூகத்தினருக்குத் தனி மாநிலமான 'கிரேட்டர் திப்ராலாந்து' கோரி வரும் பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா இக்கட்சியின் தலைவராக உள்ளார். முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், கடந்த 2019இல் டிஎம்பி கட்சியைத் தொடங்கினார். இந்த சட்டசபைத் தேர்தலில் இவர் கிங்மேக்கராக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஆதரவும் அவருக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

திரிபுரா மக்கள்தொகையில் சுமார் 32% பேர் பழங்குடியினர் ஆவர்.. இவர்களைக் குறி வைத்து, வங்காள அகதிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பழங்குடியினரின் அதிகாரம் பறிக்கப்படுவதாக அவர் தொடர்ந்து பிரத்யோத் பிக்ரம் பிரசாரம் செய்து வருகிறார். திரிபுரா அரச குடும்பத்தின் வாரிசான இவரது பிரசாரத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. பழங்குடியினர் அதிகம் உள்ள 20 தொகுதிகளைக் குறிவைத்து பிரசாரம் செய்து வரும் இவரை, மக்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். பழங்குடியினர் இவரை அன்புடன் 'புபக்ரா' என்றே அழைக்கிறார்கள்.

யார் இவர்

யார் இவர்

2019இல் காங்கிரசில் இருந்து விலகிய அவர், திப்ரா மோதா கட்சியை உருவாக்கினார். இந்தக் கட்சி 2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜகவையே தோற்கடித்தார். பாஜக மட்டுமின்றி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியால் கூட டிஎம்பி கட்சியின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த தேர்தலில் இவர்கள் மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிடுகிறது. அங்குள்ள பழங்குடியினர் பகுதிகளில் இது வலுவான அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், பிற சமூகங்களை ஒதுக்கிவிடக் கூடாது என்பதிலும் இவர் கவனமாக இருக்கிறார்.

பாஜக

பாஜக

ஒதுக்கப்பட்டு வரும் பழங்குடியினருக்கு அதிகாரம் கிடைக்கவே தான் போராடுவதாக டெப் பர்மா கூறுகிறார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றாலும் கூட அவரது கட்சியில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.. எனவே இந்தத் தேர்தலில் பெருமளவு பழங்குடியினர் வாக்குகள் இவருக்கு விழும் வாய்ப்பு அதிகம். இருப்பினும் பழங்குடியினருக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கை. ஆபத்தானது என்றும் அது திரிபுராவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் பிரசாரம் செய்கிறது பாஜக...

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

இருப்பினும், டிஎம்பி ஆதரவாளர்கள், பாஜகவின் கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். இது குறித்து தெற்கு திரிபுராவில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "எங்கள் மன்னர் வகுப்புவாதி இல்லை. அவர் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பழங்குடியினர் அல்லாதோர் என அனைவரும் அவருடன் நிற்கின்றனர். இது அவரது குடும்ப பழக்கம். வங்காளிகள் பிரிவினையின் அகதிகளாக வந்தபோது, ​​​​அவர்களை இங்குக் குடியேற அனுமதித்ததே அந்த அரச குடும்பம் தான்" என்றார்.

 கிங் மேக்கர்

கிங் மேக்கர்

திரிபுராவில் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று குறிப்பிடும் அங்குள்ள இளைஞர்கள், இது எங்களின் கடைசிப் போராட்டம் என்றும் பொய்யான பிரச்சாரத்திற்கு எதிராக நிச்சயம் டிஎம்பி வெல்லும் என்றும் கூறுகின்றனர். இந்தத் தேர்தலில் டிஎம்பி கட்சி 42 இடங்களில் திரிபுராவின் புகழ்பெற்ற அன்னாசிப்பழ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் அவர்கள் கணிசமான இடங்களில் வெல்ல வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் மன்னர் குடும்ப வாரிசு இப்போது கிங் மேக்கராக உருவெடுக்கப் போகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+