டிரான்ஸ்பர் கேட்ட பெண்ணிடம் உறவு வைத்த கர்நாடக மாஜி அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது எப்படி?
பெங்களூரு: கர்நாடக மாஜி அமைச்சர் எச்.ஒய்.மேட்டி தொடர்பான ஆபாச வீடியோ வெளியீட்டின் பின்னணியில் பெண் அரசியல்வாதி ஒருவரும், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலால்துறை முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அவர் உடலுறவு கொள்ளும் காட்சி கன்னட செய்தி டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முதல்வர் சித்தராமையாவை சந்தித்த மேட்டி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். அதன்பின்னர், அமைச்சர் குறித்த வீடியோ தொடர்பாகவும், அமைச்சர் வீட்டில் வீடியோ கேமிராவை வைத்தது யார் என்பது தொடர்பாகவும் சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் வீட்டில் கேமிராவை வைத்து ஆபாச வீடியோ எடுத்து வெளியிட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் மூலமே அவரது வீட்டில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் அரசியல்வாதி, முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் என மூன்று பேரை தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
வீடியோ வெளியாவதற்கு முன்னர், எதிர்கட்சியை சேர்ந்த அந்த பெண் அரசியல்வாதிக்கும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருக்கும் இடையே செல்போன் உரையாடல்கள் நடைபெற்றதாகவும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரை அந்த பெண் அரசியல்வாதிக்கு, அவருடன் நட்பில் இருந்த காவல்துறை துறை முன்னாள் பெண் அதிகாரி ஒருவரே அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரை அச்சுறுத்தி காரியம் சாதிக்கவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், பின்னர், ஏன் பொது வெளியில் அந்த வீடியோ வெளியிடப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. இறுதிகட்டத்தில் உள்ள இந்த விசாரணையை விரைவில் முடித்து விட்டு, அரசிடம் போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications