மே.வங்கத்தில் கொடி நாட்டிய பாஜக.. 17 தொகுதிகளில் லீடிங்.. மமதாவின் கோட்டையில் பெரும் தள்ளாட்டம்!
கொல்கத்தா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாரதிய ஜனதாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலம்தான் ஹைலைட்டாக இருந்தது. ஏனெனில் மோடி மற்றும் மம்தா பானர்ஜிக்கு இடையில் நடந்த உச்சகட்ட வார்த்தை போர் தேர்தல் விறுவிறுப்பை மேலும் கூட்டியது.
இதிலும் உச்சகட்டமாக அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணியின் போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டு பெரும் கலவரமாக மாறியது. ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறை
நாட்டில் வேறு எங்கும் நிகழாத வன்முறையை பார்த்து அரண்ட தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் ஒருநாளுக்கு முன்னதாகவே முடிக்க உத்தரவிட்டது.

போட்டா போட்டி
இதனையடுத்து மேற்கு வங்க மாநில மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனினும் பாரதிய ஜனதா கூடுதலாக ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக அபாரம்
அங்கு மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் 23 இடங்களை பாஜக, கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா 17 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 16 இடங்களிலும், காங்கிரஸ் இரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதிர்ச்சியில் மமதா
மோடி மற்றும் மம்தா இடையோன வார்த்தை போர் உச்சத்தை அடைந்த பின் நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலை பெற்று வருவது அரசியல் நோக்கர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications