நினைத்தது ஒன்று.. நடந்தது இன்னொன்று! ஜார்கண்டில் பாஜக சிக்கி திணற காரணங்கள் இவைதான்..
ராஞ்சி: மோடி அலையில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்கண்டில் அக்கட்சி திக்கி திணறிவருவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அத்தனையுமே பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றே தீர்க்கமாக அறிவித்தன. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜகவுக்கு ஆதரவாகவே டிரெண்ட் இருந்தது. இருப்பினும் நேரமாக, ஆக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட தொடங்கியது.

பல தொகுதிகளிலும் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பாஜகவுக்கு நல்ல போட்டியை கொடுத்துவருகிறது. அக்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளது.
பெர்மோ, சட்டார்புர், கோமியா மற்றும் ஜமா போன்ற தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருந்தாலும், சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அங்கும் முன்னிலை வகிக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜேஎம்எம் முன்பைவிட இப்போதுதான் முன்னேறியுள்ளது. 2009ம் ஆண்டில் 18 எம்.எல்.ஏக்களை பெற்றிருந்த அக்கட்சி இப்போது தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. 20 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையிலுள்ளது.
மற்றொரு பக்கம், பாபுலால் மரான்டியின், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஏஜேஎஸ்யூ கட்சி அடைந்துள்ள பின்னடைவும் பாஜகவை பாதித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் சுதேஷ் மக்டோ சில்லி தொகுதியில் தோற்றுள்ளார். இத்தொகுதியில் 15 வருடங்களாக அவரே எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் அவரின் தோல்வி முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சென்டிமென்டாக நடத்திய பிரச்சாரமும் பாஜகவுக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறிவிட்டது. அதாவது, பழங்குடியினரின் நில உரிமையை மோடி அரசு பறித்துவிடும் என்று பயமுறுத்தி ஜேஎம்எம் நடத்திய பிரச்சாரத்திற்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பழங்குடியினர் அதிகமுள்ள தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications