உத்தரகாண்ட்: தொங்கு சட்டசபையா, பெரும்பான்மையா? பெரும்பாலான கருத்துக்கணிப்பு ரிசல்ட் என்ன தெரியுமா?
டேராடூன்: உத்தரகாண்டில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக வெளியாகி உள்ளன. இதில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் இடங்கள் குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
நடந்துமுடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நூழிலையில் தான் வித்தியாசம் வரும் என தெரியவந்துள்ளது.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

கருத்துக்கணிப்புகள்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. உத்தரகாண்டில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பில் பாஜக 31- 33; காங்கிரஸ் 33-35; ஆம் ஆத்மி 0-3 என தெரியவந்துள்ளது. ஈடிஜி ரிசர்ச் கருத்துக்கணிப்பில் பாஜக 38, காங்கிரஸ் 31 என கூறியுள்ளது.

சி வோட்டர்
சி வோட்டர் கருத்துக்கணிப்பில் பாஜக 29; காங்கிரஸ் 35; ஆம் ஆத்மி 1 என குறிப்பிட்டுள்ளது. பி மார்க் கருத்துக்கணிப்பின்படி பாஜக 37; காங்கிரஸ் 31; ஆம் ஆத்மி 1 என்றும், வீடோ கணிப்பின்படி பாஜக 37; காங்கிரஸ் 31; ஆம் ஆத்மி 1 இடத்தையும் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. ஜன்கிபாத் கருத்துக்கணிப்பில் பாஜக 32-41; காங்கிரஸ் 27-35; ஆம் ஆத்மி 0-1 என கூறியுள்ளது. சராசரியாக உத்தரகாண்ட் மாநில கருத்துக்கணிப்பில் பாஜக 35; காங்கிரஸ் 32; ஆம் ஆத்மி 1; இதர- 2 இடங்கள் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம்
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 14ம் தேதி தேர்தல் நடந்தது.

பாஜக
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். பாஜக கடந்த தேர்தலில் 70 இடங்களில் 57 இடங்களைப் பெற்றது.












Click it and Unblock the Notifications