இதுதான் பாஜக.. "இந்தியா" வந்தாலும் அசைக்க முடியாது.. உத்தர பிரதேசத்தில் கிளீன் ஸ்வீப்.. பரபர சர்வே!
கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் 7-8 மாதங்கள் உள்ள நிலையில்தான் கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அதே சமயம் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மக்களவை 2024 - மேற்கு வங்கம்: மொத்த இடங்கள்: 42
- பாஜகவின் என்டிஏ கூட்டணி : 17-19
- திரிணாமூல் காங்கிரஸ் - காங்கிரசின் இந்தியா கூட்டணி: 22-26
- மற்றவை: 0
ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசம்: மொத்த இடங்கள்: 80
- பாஜகவின் என்டிஏ கூட்டணி: 70-74
- சமாஜ்வாதி - காங்கிரசின் இந்தியா கூட்டணி: 4-8
- பகுஜன் சமாஜ்: 0-1
- மற்றவை: 1-3
இந்தியா கூட்டணி: நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
இந்த கூட்டணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் கிளீன் ஸ்வீப் செய்யும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது., அங்கே கடந்த 2014 தேர்தலில் 71 இடங்கள், 2019 தேர்தலில் 62 இடங்களை பாஜக வென்றது. பகுஜன் சமாஜ் 2014ல் ஒரு இடத்தில கூட வெல்லவில்லை. 2019ல் 10 இடங்களில் வென்றது.
சமாஜ்வாதி இரண்டு தேர்தலிலும் 5 இடங்களை வென்றது. காங்கிரஸ் 2014ல் 2 இடத்தில் வென்றது. 2019ல் 1 இடத்தில் மட்டும் வென்றது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் நிலையில், இது தொடர்பாக டைம்ஸ் நவ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில்தான் மேற்கண்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications