ஷீனா கொலையில் உங்க அப்பாவுக்குத் தொடர்பிருக்கிறதா?.. மெளனம் காத்த ராகுல் முகர்ஜி
மும்பை: ஷீனா போரா கொலையில் உங்களது தந்தைக்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்துள்ளார் பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனாவைக் காதலித்தவருமான ராகுல் முகர்ஜி.
ஷீினா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, இந்திராணியின் மகன் மிக்கயில் போரா உள்ளிட்டோரை விசாரித்துள்ளது மும்பை போலீஸ்.
இந்த நிலையில் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்குப் பிறந்தரவான ராகுல் முகர்ஜியிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இவரும், ஷீனாவும்தான் காதலித்து வந்தனர். குடும்பமும் நடத்தி வந்தனர். இதுவே ஷீனாவை இந்திராணி கொல்லக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

யாருமே சொல்லவில்லை
போலீஸ்: 2012க்குப் பிறகு ஏன் ஷீனாவைத் தொடர்பு கொள்ள நீங்கள் முயற்சிக்கவில்லை?
ராகுல்: யாரிடம் கேட்டாலும் அவரைப் பற்றிய தகவல்களைச் சொல்லவில்லை, சொல்லவும் மறுத்தனர்.

இன்னும் வேகமாக ஏன் தேட முயற்சிக்கவில்லை?
போலீஸ்: நீங்கள் ஷீனாவுடன் கிட்டத்தட்ட 6 வருடத்திற்கும் மேலாக தொடர்பு வைத்திருந்தீர்கள். இன்னும் தீவிரமாக அவரைத் தேட முயற்சித்திருக்கலாமே. ஏன் அதைச் செய்யவில்லை?
ராகுல்: நான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கக் கூட முடிவு செய்து வந்து விட்டேன். ஆனால் இந்திராணிதான் புகார் தர விடாமல் தடுத்து விட்டார்.

ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்டீர்களா?
போலீஸ்: ஏன் ஷீனாவை அமெரிக்காவுக்கு அனுப்பினீர்கள் என்று இந்திராணியிடமோ, பீட்டரிடமோ கேட்டீர்களா?
ராகுல்: படிப்புக்காக அனுப்பியிருப்பதாக இருவரும் கூறினர்.

ஷீனாவை விட்டு விலகுமாறு இந்திராணி கூறினாரா?
போலீஸ்: இந்திராணி எப்போதாவது, ஷீனாவிடமிருந்து உங்களை விலகுமாறு கூறியிருக்கிறாரா?
ராகுல்: பலமுறை. என்னை மிரட்டக் கூட செய்தார்.

சஞ்சீவ் கன்னாவைத் தெரியாது
போலீஸ்: சஞ்சீவ் கன்னாவைத் தெரியுமா?
ராகுல்: தெரியாது.

சித்தார்த் தாஸைத் தெரியாது
போலீஸ்: சித்தார்த் தாஸைத் தெரியுமா?
ராகுல்: தெரியாது.

மிக்கயிலைத் தெரியுமா?
போலீஸ்: மிக்கயிலைத் தெரியுமா?
ராகுல்: தனது தம்பி என்று ஷீனா என்னிடம் கூறியுள்ளார்.

ஷீனா கொல்லப்பட்டாரா?
போலீஸ்: ஷீனா கொல்லப்பட்டாரா?
ராகுல்: எனக்குத் தெரியாது.

அப்பாவுக்குத் தொடர்பு உள்ளதா?
போலீஸ்: இந்த கொலை வழக்கில் உங்களது தந்தைக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறீர்களா?
ராகுல்: (பதில் இல்லை - பெருத்த அமைதி)

உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா?
போலீஸ்: இந்த வழக்கில் எந்த வகையிலாவது உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா?
ராகுல்: உங்களிடம் முக்கியக் குற்றவாளியே பிடிபட்டுள்ளார். அவரிடம் கேட்டால் தெரிந்து விடப் போகிறது.

யார் கொன்றது ஷீனாவை?
போலீஸ்: ஷீனாவை யார் கொன்றிருக்கலாம் என கருதுகிறீர்கள். என்ன காரணத்திற்காக கொன்றிருக்கலாம்?
ராகுல்: எனக்குத் தெரியாது. ஆனால் கொன்றது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராகுல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications