103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.. என்ன காரணம் தெரியுமா
லக்னோ: இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட 103 வயதான ஒருவர் 49 வயது பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நமது நாட்டில் மறுமணம் என்பது இப்போது தான் மெல்ல ஆங்காங்கே நடக்கிறது. துணைகள் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேறுபாடுகளால் பிரிந்தால் மீண்டும் மறுமணம் செய்யும் முறை ஆங்காங்கே இப்போது தான் நடக்கிறது.

இதற்கிடையே 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் தன்னை விடப் பாதி வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
மூன்றாவது திருமணம்: ஹபீப் நாசர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் 49 வயதே ஆன ஃபிரோஸ் ஜஹான் என்ற பெண்ணை மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின் மூன்றாவது திருமணம். அவரது இரண்டாவது மனைவி இறந்த பிறகு, நாசர் தனிமையில் தவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் இப்போது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த ஜோடி கடந்த ஆண்டே திருமணம் செய்து கொண்ட போதிலும், இப்போது அவர்கள் ஜோடியாக இருக்கும் வீடியோ இணையத்தில் பரவியது மீண்டும் இது பேசுபொருளாகக் காரணமாக அமைந்தது. இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் நாசரும் அவரது மனைவியும் தங்கள் திருமண விழா முடிந்து வீடு திரும்புவதைப் பார்க்கலாம். மேலும், இதில் சுற்றி இருக்கும் பலரும் அந்த தம்பதியை வாழ்த்துவதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
என்ன காரணம்: இது குறித்து நாசர் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனது வாழ்க்கையில் எதற்கும் குறை இல்லை. நான் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால், எனது மனைவி இறந்த பிறகு நான் மிகவும் தனிமையில் இருந்தேன். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்த தனிமை காரணமாகவே நான் இப்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.
நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிராவின் நாசிக்கிலும், இரண்டாவது திருமணம் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவிலும் நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு அவருக்கு மூன்றாவது திருமணம் நடந்துள்ளது. நாசர் திருமணம் செய்து கொண்ட ஃபிரோஸ் ஜஹானுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.. ஜஹானும் தனது கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான் 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரரைப் பராமரிக்க யாரும் இல்லாததால், 49 வயதான ஜஹான் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக ஹபீப் நாசர் மேலும் கூறுகையில், "எனக்கு வயது 103.. என் மனைவிக்கு வயது 49. எனக்கு நாசிக்கில் முதல் திருமணம் நடந்தது. அவர் இறந்த பிறகு மீண்டும் திருமணம் செய்ய லக்னோ சென்றேன். எனது இரண்டாவது மனைவியும் உலகை விட்டே பிரிந்துவிட்டார். அவர் போன பிறகு நான் தனிமையாக உணர்கிறேன், அதனால் நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன்" என்றார்.
முக்கியமான விளக்கம்: 103 வயது முதியவரைத் திருமணம் செய்து கொண்டது குறித்து அந்த பெண் ஃபிரோஸ் ஜஹான் கூறுகையில்,, "இது எனது சொந்த முடிவு.. இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என யாருமே என்னைத் துன்புறுத்தவில்லை. என் கணவர் முற்றிலும் நலமாக இருக்கிறார், அவருக்கு மருத்துவ பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை" என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications