சாலை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நாளை பஸ்- லாரி சங்கங்கள் ஸ்டிரைக்!- சட்டம் சொல்வது என்ன?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை எதிர்த்து வரும் 30ம்தேதி, நாடு முழுவதும், லாரி, பஸ், ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.
சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற பெயரிலான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்த சட்டம் வந்தால், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எனவே, சட்டத்தை எதிர்க்கின்றனர் தொழிலாளர் சங்கங்கள்.
சட்டம் எனன சொல்கிறது:
- வாகன ஒழுங்குமுறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையத்தை இந்த சட்டம் வலுப்படுத்தும்.
- வாகனங்களுக்கு, சாலை பயனாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை ஆணையம் வழங்க சட்டம் உதவும்.
- இந்த ஆணையமானது, தேசிய அளவிலான வாகன தகவல்களை சேகரித்து வைக்க முடியும்.
- வாகன பதிவு எண், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், பெர்மிட்டுகள், அபராதங்கள், விபத்துகள் போன்ற விவரங்களை அந்த ஆணையம் பதிவு செய்து வைத்திருக்கும்.
- ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட லைசென்சுகள் வைக்க முடியாது.
- டிராபிக் விதிமீறல்களை கண்காணித்து, அவற்றுக்கு புள்ளிகள் கொடுக்கும் ஆணையம்.
- அபராத புள்ளிகளை, டிரைவர்களின் லைசென்சை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
- 12 புள்ளிகள் சேர்ந்துவிட்டால், டிரைவரின் லைசென்சை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்ய முடியும்.
- அபராதம் தவிர்த்து, சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
- பஸ், ஆட்டோ யூனியன்கள் எதிர்ப்பது ஏன்?
- பல ஆயிரம் டிரைவர்கள், நடுத்துநர்கள், பிற பணியாளர்கள் இந்த சட்டத்தால் பணியிழப்பார்கள்.
- அரசு போக்குவரத்து கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.
- தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தில், உள்ள பலன்கள் ரத்தாகிவிடும்.
- மோட்டார் வாகன இன்சூரன்ஸ்சுகள், ஃபிட்னஸ் சான்றுகள், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை அளிக்கும் உரிமை தனியாருக்கு சென்றுவிடும்.
- மாநில அரசிடமிருந்த போக்குவரத்து துறை அதிகாரங்கள், மாநில அரசுக்கு சென்றுவிடும்.
- போராடுவது யார்?
- அனைத்திந்திய சாலை போக்குவரத்து ஊழியர் பேரமைப்பின் கீழ் உள்ள, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியூ மற்றும் தனியார் மாநில சங்கங்கள், தமிழ்நாட்டின் எல்பிஎப், உத்தர பிரதேச ரோடுவேஸ், குஜராத் மாநில போக்குவரத்து பணியாளர் கூட்டமைப்பு, உத்தரகாண்ட் ரோடுவேஸ் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
- மொத்தம் 7.5 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர்.
- பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டோ டிரைவர்களும் அன்றையதினம் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications