Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்ஸ் ஆடிய ராஜ்தீப்.. ஆனால் எதுக்காக டான்ஸ் போட்டார்.. அதுக்காக இல்லையாம்.. இதுக்காகவாம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆம் ஆத்மி எம்எல்ஏ வாகனம் மீது தாக்குதல்.. தொண்டர் பலி

    டெல்லி: இந்தியா டுடேவின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் தேர்தல் முடிவுகள் வெளியான போது செய்தி அரங்கத்தில் டான்ஸ் ஆடியது ஆம் ஆத்மி வெற்றிக்காக என தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவர் வேறு ஒரு விஷயத்திற்காக டான்ஸ் ஆடியது தற்போது தெரியவந்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளிலும் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மியே ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என கணிக்கப்பட்டது.

    why did rajdeep sardesai dance during the poll result live

    மை இந்தியா, ஆக்ஸிஸ் மை இந்தியா, சி வோட்டர், நியூஸ் எக்ஸ் நேத்தா, ரிபப்ளிக், டிவி 9, சுதர்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் தனித்தனியே கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

    இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்த கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா, ரிபப்ளிக் டிவி ஜன் கீ பாத், ஏபிபி சி வோட்டர் ஆகிய 3 நிறுவனங்கள் கிட்டதட்ட தேர்தல் முடிவுகளுடன் ஒத்து போகும் அளவுக்கு கணித்தன. நேற்று தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்திய டுடே சார்பில் சிறப்பு விருந்தினர்களுடன் விவாதம் நடைபெற்றது.

    அந்த விவாதத்தில் இந்தியா டுடேவின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாயும் ஆக்சிஸ் மை இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் குப்தாவும் கலந்து கொண்டனர். அப்போது ராஜ் சர்தேசாய் 1999-ஆம் ஆண்டு ஷாரூக்கான் நடித்த பாட்ஷா ஓ பாட்ஷா பாடலுக்கு நடனம் ஆடினார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.

    இதை பார்த்த ட்விட்டர்வாசிகள் இவர் ஆம்ஆத்மி வெற்றிக்கு நடனம் ஆடுவதாக நினைத்து திட்டி தீர்த்துவிட்டனர். பாஜகவின் தோல்வியடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை ராஜ்தீப் சர்தேசாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் நடுநிலைவாதிஅல்ல என தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராஜ்தீப் தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

    அவர் கூறுகையில் ஆமாம் சார் என்னுடைய கருத்து கணிப்புகள் சரியாக வந்துள்ளது. அதை நாங்கள் கொண்டாடினோம். முட்டாள் மாதிரி பேசாதீர்கள். லோக்சசபா தேர்தல் முடிவுகள் வெளியான போதும் சரியான கருத்துகணிப்புகளை வெளியிட்டமைக்கு டான்ஸ் ஆடினோம் என தவறாக புரிந்து கொண்டு கருத்து தெரிவித்த ட்விட்டர்வாசிகளை திட்டி தீர்த்துவிட்டார்,.

    மாநில சட்டபேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடும் கருத்து கணிப்புகள் தேர்தல் முடிவுகளுடன் கிட்டத்தட்ட ஒத்து போனால் அதை கணித்த குழுவுக்கு அதை விட பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அதைத் தான் சர்தேசாய் செய்துள்ளார், மற்றபடி அவர் ஆம் ஆத்மிக்கு வெற்றிக்காக டான்ஸ் ஆடவில்லை. அவர் களத்தில் இறங்கி வேலை பார்த்தமைக்கு கிடைத்த வெற்றியை நினைத்தே ஆடினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+