பெரிய தோனின்னு நினைப்பா? டென்ஷன் ஏற்படுத்திய ராஜஸ்தான் வீரர்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?
காந்தி நகர்: ராஜஸ்தான் அணியில் ஆடி வரும் ரியான் பராக் தனது பேட்டிங் காரணமாக நெட்டிசன்களால் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ராஜஸ்தான் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2022 பைனல் ஆட்டம் தற்போது அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 130-9 ரன்களை மட்டுமே 20 ஓவரில் எடுத்தது.

குஜராத்
குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து குஜராத் அணி பேட்டிங் இறங்கி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. அடுத்தடுத்து குஜராத் அணி கொடுத்த 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீரர்கள் இழந்தனர். தற்போது வரை ராஜஸ்தான் அணி 4.3 ஓவரில் 23-2 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

பினிஷர்
இந்த ஐபிஎல் போட்டியின் போது ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் தன்னை சிறந்த பினிஷர் என்று கூறினார். அணிக்காக பல போட்டிகளை பினிஷ் செய்ய விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பினிஷ் செய்வேன் என்று கூறினார். கடந்த போட்டியில் கூட ரியான் பராக், அஸ்வின் தனது ஸ்டிரைக் தரவில்லை என்று கோபம் அடைந்தார். ரன் அவுட் ஆன அவர் அஸ்வினிடம் கோபமாக கத்திவிட்டு சென்றார்.

மோசமான பேட்டிங்
தன்னை சிறந்த பினிஷராக காட்டிக்கொள்ளும் ரியான் பராக் இன்று முக்கியமான கட்டத்தில் மோசமான பேட்டிங் செய்தார். ராஜஸ்தான் அணியில் ஹெட்மயர் அவுட்டான பின் 14.6 ஓவரில் ராஜஸ்தான் 94-5 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டு இருந்தது. அப்போது இறங்கிய ரியான் பராக் நினைத்திருந்தால் கடைசி 5 ஓவரில் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணியை மீட்டு இருக்கலாம். அணியை சரிவில் இருந்து மீட்டு நல்ல இலக்கை நோக்கி கொண்டு சென்று இருக்கலாம்.

ஸ்லோ பேட்டிங்
ஆனால் ரியான் பராக் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 15 பந்துகள் பிடித்த அவர் 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். அவரின் இந்த மோசமான பேட்டிங் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பொதுவாக தோனி தொடக்கத்தில் டொக் வைத்து ஆடிவிட்டு அதன்பின் அதிரடி காட்டுவார். ஆனால் ரியான் பராக் தன்னை தோனி என்று நினைத்துக்கொண்டு டொக் வைத்துவிட்டு.. ஆனால் கடைசியில் அதிரடி காட்டாமல் போய்விட்டார் என்று நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் விமர்சனம்
இவரின் பேட்டிங்கை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்கள்தான் பினிஷரா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இவர் பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர். கோலி போல ஆடவில்லை என்றாலும் கோலி போல ரியான் பராக் கோபம் அடைவார். அதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கோபம் அடைவதை விட்டுவிட்டு கேமில் கவனம் செலுத்துங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications