நெற்றியிலேயே "குறி" வைத்து சுட்ட மர்மநபர்கள்.. 2 தமிழர்கள் சுருண்டு விழுந்து பலி.. பரபர மியான்மர்
மியான்மரில் 2 தமிழர்கள் நெற்றியிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை தந்துவருகிறது
இம்பால்: மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் 2 பேர் மிக கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனா்... 2 பேரின் நெற்றியிலும் குறி பார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம்.. இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன், வயது 28 மற்றும் எம்.அய்யனாா் வயது 35.
இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர்.. இதில் மோகன் என்பவர் ஆட்டோ டிரைவராக இருந்தார்... அய்யனார், தான் வசிக்கும் பகுதியிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார்.

சுட்டுக் கொலை
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, இவா்கள் 2 பேரையும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் யாரோ சுட்டுக் கொன்றுவிட்டனர்.. அந்த பகுதியில் உள்ளவர்கள் இவர்களின் சடலங்களை கண்டு அலறி அடித்து ஓடி, போலீசுக்கும் தகவல் தந்தனர்.. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தமிழர்கள் கொலை
இதுகுறித்து மோரேயில் உள்ள தமிழ்ச் சங்கத்தினா் சொல்லும்போது, "தமிழா்கள் இருவரையும் உளவாளிகள் என்று நினைத்து மியான்மா் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றிருக்கலாம்" என்றனர்.. மியான்மரை பொறுத்தவரை, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.. இதைத்தொடா்ந்து, அந்த நாட்டுடனான சா்வதேச எல்லை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்டிருக்கிறது.. இருந்தாலும், வா்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடந்து வந்து செல்வது வழக்கம்..

மியான்மர்
அந்த வகையில், கொல்லப்பட்ட தமிழர்களும் அந்த வழியாக சென்றிருக்கலாம் என்றும் தமிழ்ச் சங்கத்தினா் கூறுகிறார்கள்.. ஆனால், போலீஸ் தரப்பிலோ வேறு விதமாக சொல்லப்படுகிறது.. இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, 2 பேரையும் காணவில்லை என்று காவல்துறையில் இரு தரப்பினர் சார்பாக புகார் தரப்பட்டிருந்ததாம்.. இவர்களை மியான்மர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றுள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்..

நெற்றியிலேயே சுட்டனர்
சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் பைக்கில் வந்துள்ளனர்.. 2 தமிழர்களின் நெற்றியை குறி பார்த்தும் சுட்டுக் கொன்றுள்ளனர் என்கிறார்கள்.. எனினும், இவர்கள் இருவரும் எதற்காக மியான்மா் எல்லைக்குள் சென்றாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மணிப்பூா் போலீஸாா் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே, கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications