Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லீக்" ஆன அந்தரங்க போட்டோ.. யார்னு தெரியுதா.. அதுவும் நடுரோட்டில் அடித்து கொண்டு.. கப்பலேறிய மானம்

2 இளம்பெண்கள் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: 2 இளம் பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. என்ன காரணம்?
2 நாளுக்கு முன்பு, ஒருவீடியோ இணையத்தில் வைரலானது.. உத்தரபிரதேசத்தில் ப்ரீத்தி நிகாம் என்ற ஒரு பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடி இருக்கிறார்கள்..

ஸ்கூலை சுத்தம் செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... அப்போது ஒரு கிளாஸில், இது தொடர்பாக டீச்சர்களுக்குள் பெரிய சண்டையே நடந்துவிட்டது..

 மாறும் கோலம்

மாறும் கோலம்

கிளாஸ் ரூமில், மாணவர்கள் மொத்த பேரும் உட்கார்ந்திருந்தபோது, டீச்சர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.. ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.. இவர்களின் சண்டையை தடுக்க முடியாமல், பிள்ளைகள் தடுமாறி விழித்து கொண்டிருந்தனர்.. அப்படி இருந்தும் டீச்சர்கள் ஒருவருக்கொருவர் முடியை பிடித்து கொண்டு சண்டை போட்டதால், ஒருசில மாணவர்கள், அவர்களை விலக்கிவிடவும் முயன்றுள்ளனர்.. ஒரு டீச்சரையும் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

 ஸ்கூல் டீச்சர்

ஸ்கூல் டீச்சர்

இது வீடியோவாகவும் வெளிவந்தது.. இந்த வீடியோ மட்டும் 45 நிமிஷம் ஓடியது.. 45 நிமிஷமும் சண்டைதான்..
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தகராறு செய்த 2 டீச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.. இவர்கள் வெறும் டீச்சர்கள் மட்டுமல்ல, 3 பேரில் ஒருவர் அந்த ஸ்கூல் தலைமையாசிரியர், ஒரு உதவி ஆசிரியர் நஹித் ஹாஷ்மி, இன்னொருவர் புஷ்பலதா பாண்டே பரிசாரிகா என்ற உதவியாளர்.. இவர்களுக்குள்தான் சண்டை வந்துள்ளது.

 சீரியஸ் கவுன்சிலிங்

சீரியஸ் கவுன்சிலிங்

இதை பார்த்ததும் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து, மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடனடியாக கவுன்சிலிங் தேவை" ஏன்று பதிவிட்டனர். இப்போது இன்னொரு வீடியோ வெளியாகி கொண்டிருக்கிறது.. இதுவும் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் ஆகும்.. நடுரோட்டில் 2 இளம்பெண்கள் ஒருவரையொருவர் அடித்து கொண்டுள்ளனர்.. 2 பெண்களுமே வசதியான வீட்டு பெண்கள் போல தெரிகிறது.. தலைமுடியை பிடித்து ஒருவர் அடிக்க, இன்னொருவர் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குகிறார்..

 லீக் ஆன போட்டோ

லீக் ஆன போட்டோ

இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ந்து போய், என்ன நடந்தது என்று அந்த பெண்களிடம் கேட்டனர்.. அதில் ஒரு பெண், "என்னுடைய அந்தரங்க போட்டோவை இவள் லீக் செய்துவிட்டாள், செல்போனில் போட்டோ வைத்திருந்தேன். எனக்கு தெரியாமல் வெளியே ஷேர் செய்துவிட்டாள்" என்று ஆவேசமாக புகார் சொல்லி கொண்டே, இன்னொரு பெண்ணை தாக்குகிறார்.. அந்த பெண்ணும் பதிலுக்கு அடிக்கிறார்.. நடுவில் செல்போனை பிடித்து இழுத்து கொள்கிறார்கள்.. இருவரும் நெருங்கிய தோழிகள் என்று தெரிகிறது.

 சீக்ரெட்கள்

சீக்ரெட்கள்

இதனால், என்ன செய்வதென்று குழம்பி போன பொதுமக்கள், அவர்களை விலக்கி விட முயன்றனர்.. மேலும் சிலர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர்.. இதெல்லாம் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இன்றைய இளம் தலைமுறைகளின் உடலில் ஓர் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட இந்த செல்போனை, நல்வழிகளில் பயன்படுத்தாமல், தீய வழிகளில் பயன்படுத்த தொடங்கினால் இப்படித்தான் நடுத்தெருவில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+