பெண்ணை "கொஞ்சிய" ஏட்டய்யா.. அதுவும் யூனிபார்மில்.. அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே.. கட்டில் வேற..!
ஸ்டேஷனுக்குள் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து கொஞ்சிய ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
கான்பூர்: போலீஸ் ஸ்டேஷனிலேயே, இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கொஞ்சிய, ஏட்டய்யாவை, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.
உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள டியொரியா என்ற மாவட்டத்தில் கேவலமான ஒரு சம்பவம் நடந்தது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது..

"சுய இன்பம்"
அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார்.. அப்போது ஸ்டேஷனில் பீஷ்ம் பால் சிங் என்ற போலீஸ்காரர் இருந்தார்.. பெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு, தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்.. பிறகு சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன அந்த வெளியே சென்றுவிட்டார்.. பிறகு மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தபோதும் இதுபோலவே செய்தார் அந்த போலீஸ்காரர்.

13 வயது பிஞ்சு
அதை மறைமுமாக வீடியோ எடுத்த பெண், மாவட்ட எஸ்பியிடம் அந்த ஆபாச வீடியோவை தந்துவிட்டார்.. பிறகு, அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. அதேபோல, இதே உபியில் இன்னொரு சம்பவம் நடந்தது.. 13 வயது சிறுமியை 4 பேர் கடத்திக் கொண்டு போய், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.. இதனால் பாதிக்கப்பட்ட பெண், புகார் அளிப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.. புகாரை பெற்றுக் கொண்ட, இன்ஸ்பெக்டர், அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே அந்த சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது.

கட்டிப்பிடித்து கொஞ்சல்
இப்போது இன்னொரு கொடுமை, இதே உத்தரபிரதேசத்தில், அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.. அந்த ஸ்டேஷனுக்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.. அவர் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.. அந்த பெண் எதற்காக ஸ்டேஷனுக்கு வந்தார் என்று தெரியவில்லை.. அந்த பெண்ணை கட்டிபிடித்து கொஞ்சி உள்ளார் ஏட்டு..

யூனிபார்ம்
ஸ்டேஷனிலேயே கட்டில், தலைகாணி எல்லாம் இருக்கிறது.. அந்த கட்டிலில்தான் ஏட்டைய்யா உட்கார்ந்து கொண்டு, இவ்வளவு சேட்டைகளையும் செய்துள்ளார்.. அதுவும் யூனிபார்மிலேயே இந்த அக்கிரமத்தை செய்துள்ளர்.. இந்த சம்பவம் 2 வருடத்துக்கு முன்பு நடந்ததாக சொல்கிறார்கள்.. ஆனால், இந்த வீடியோ இப்போதுதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சஸ்பெண்ட் + வீடியோ
இதையடுத்து, இந்த ஏட்டுவும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "பாங்கர்மாவ் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு தீப் சிங், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன் கோட்வாலி ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.. அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதையடுத்து உன்னாவ் எஸ்பி உத்தரவின் பேரில் ஏட்டு தீப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications