For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செருப்பை கழட்டி.. படார் படாரென அடித்த பெண் ஊழியர்.. அலங்கோலமாகிவிட்ட டிரைவர்.. டோல்கேட்டில் சூறாவளி

டோல்கேட் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

போபால்: டோல்கேட் பெண் ஊழியரை, கார் டிரைவர் கன்னத்தில் அறைந்ததும், பதிலுக்கு கார் டிரைவரை, இந்த பெண் ஊழியர் செருப்பால் அடித்ததும், வீடியோவாக வெளியாகி பரபரப்பை கூட்டி உள்ளது.

Recommended Video

    படார் படாரென அடித்த பெண் ஊழியர்.. அலங்கோலமாகிவிட்ட டிரைவர்.. டோல்கேட்டில் சூறாவளி

    நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் எத்தனையோ முறை கொந்தளித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்... தொடர்ந்து நடத்தியும் வருகிறார்கள்..

    அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

    அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான் அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான்

    வேல்முருகன்

    வேல்முருகன்

    இதற்கு காரணம், மத்திய அரசு திடீர் திடீரென உயர்த்தும் டோல்கேட் கட்டணங்கள்தான்.. டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக மகாராஷ்டிராவில் கூட பல போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.. இந்த கட்டணங்களை நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.. ஆனாலும், பல பெயர்களில் கட்டணங்கள்தான் அதிகம் விதிக்கப்பட்ட வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. திடீரென அதிக அளவு கட்டணம் கேட்டுவிடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் டோல்கேட் ஊழியர்களிடம் தகராறில் ஆத்திரத்தை கொட்டிவிடும் நிலைமை உள்ளது..

    செக்போஸ்ட்

    செக்போஸ்ட்

    இது ஒருகட்டத்தில் வன்முறையில் கொண்டுபோய் விட்டுவிடுவதும் உண்டு. மத்திய அரசை கேள்வி கேட்க முடியாமல், செக்போஸ்ட்டில் இருக்கும் ஊழியர்களிடம் கோபத்தை காட்டும் போக்கு, தொடர்கிறது. அந்தவகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராஜ்கர்-போபால் சாலையில் கச்னாரியா என்ற செக்போஸ்ட் உள்ளது.. இந்த சுங்கச்சாவடியில், வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.. அப்போது, அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது.. ராஜ்குமார் குர்ஜார் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்..

    எலக்ட்ரானிக்

    எலக்ட்ரானிக்

    காரை நிறுத்திய அந்த பெண் ஊழியர், டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி உள்ளார். அந்த கார் டிரைவர், கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். அதாவது, ஃபாஸ்டேக் - எலக்ட்ரானிக் கட்டணம் செலுத்தும் கார்டு இல்லை என்று கூறப்படுகிறது.. மேலும், தான் உள்ளூர்க்காரர் என்பதால் கட்டணம் செலுத்த முடியாது என்று ராஜ்குமார் குர்ஜார் கூறியுள்ளார்.. அப்படியானால், உள்ளூர்காரர் என்பதை நிரூபிக்க, ஆதாரம், ஆவணம் ஏதாவது காட்டுங்கள் என்று பெண் ஊழியர் சொல்லி உள்ளார்.. இதை கேட்டு எரிச்சலடைந்த கார் டிரைவர், அந்த பெண்ணை பளார் என்று அறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

     செருப்பால் அடித்தார்

    செருப்பால் அடித்தார்

    இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அதிர்ச்சியடைந்து, தன்னுடைய காலில் இருந்த செருப்பை கழட்டி, அந்த நபரை 5,6 முறை படார் படாரென திருப்பி அடித்துவிட்டார்.. அங்கிருந்த நகர்ந்த டிரைவர், மறுபடியும் பெண்ணை தாக்க முயன்றபோது, அப்போதும் பெண் விடவில்லை.. விடாமல் அந்த டிரைவரின் தலையிலேயே அடித்தார்.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியிலும் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.. போலீஸ் தரப்பில் இதை பற்றி சொல்லும்போது, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர், அந்த நபருக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் தந்துள்ளார்.. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம்.. ஆனா, குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.. அவர் தலைமறைவாக உள்ளதால் தேடி வருகிறோம்" என்றார்..

    உள்ளூர்க்காரர்

    உள்ளூர்க்காரர்

    அந்த பெண் ஊழியர் பெயர் அனுரந்தா டாங்கி.. அவர் இதை பற்றி சொல்லும்போது, "அவர் ஒரு உள்ளூர்க்காரர் என்றார்.. அதற்கு நான், எனக்கு உங்களை தெரியாது என்று சொல்லிவிட்டு, என்னுடைய எங்கள் சூப்பர்வைசரிடம் சொன்னேன்.. இப்படி சொல்லிக் கொண்டிருந்தபோதே, அந்தநபர் திடீரன காரை விட்டு வந்து என்னை அடித்துவிட்டார்.. நானும் பதிலுக்கு அடித்துவிட்டேன் என்றார். இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Why does tollgate woman staff attack the car driver in Madhya pradesh, what happened டோல்கேட் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X